நடக்க இருந்த தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும்? - அரசு அதிரடி அறிவிப்பு!
நடக்க இருந்த தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும்? - அரசு அதிரடி அறிவிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியா மாநிலத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏப்ரல் - மே மாதங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வு எப்போது நடைபெறும் என மாணவர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறக்கும் தொடக்கத்திலேயே தேர்வுகளை நடத்தலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் கலை அறிவியல், பொறியியல் உள்பட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்தப் பருவ செமஸ்டர் தேர்வுகளை அடுத்த பருவ தொடக்கத்தில் நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு தான் புதிய பருவத்துக்கான பாடங்கள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ShortNews|Podhigai
— Tamil News - Doordarshan (@DDNewsChennai) April 16, 2020
தமிழகத்தில் கல்லூரி, பல்கலைகழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும்.
**தேர்வு முடிந்த பிறகு அடுத்த ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன்.#TamilNewsPodhigai#IndiaFightsCorona pic.twitter.com/oXhVyAufJB