Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு இந்து அடையாளம் நாஜிக்களின்‌ சின்னம் என்று திரிக்கப்பட்ட வரலாறு - ஸ்வஸ்திக் அடையாளத்தை மீட்கும் போர்.!

ஒரு இந்து அடையாளம் நாஜிக்களின்‌ சின்னம் என்று திரிக்கப்பட்ட வரலாறு - ஸ்வஸ்திக் அடையாளத்தை மீட்கும் போர்.!

ஒரு இந்து அடையாளம் நாஜிக்களின்‌ சின்னம் என்று திரிக்கப்பட்ட வரலாறு - ஸ்வஸ்திக் அடையாளத்தை மீட்கும் போர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 2:29 AM GMT

இந்த கட்டுரையில் நாம் சில முக்கியமான கேள்விகளை கேட்கலாம். ஆனால் அதற்கு முன்பு இந்த கட்டுரையில் எழுப்பப்பட உள்ள கேள்விகளின் பல பரிமாணங்களை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவத்திற்கு முந்திய ஐரோப்பா

கிறிஸ்தவம் கண்டுபிடிக்கப் படுவதற்கு வெகு நாளைக்கு முன்பே மக்கள் ஐரோப்பாவில் சமூகங்களாக வாழ்ந்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்துக் கண்டறிந்த பல கலைப் பொருட்கள் வாயிலாக, இந்த சமூகங்கள் நம்பிக்கை அமைப்புகள், தெய்வங்கள், சடங்குகள் மற்றும் சின்னங்களை ஒழுங்கமைத்து வாழ்ந்ததைக் கண்டறிய முடிந்தது. அந்தச் சின்னங்கள், குறிப்பாக, ஒரு சின்னம் தான் இந்தக் கட்டுரையின் விஷயம். ஐரோப்பா முழுமையுமே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்தக் குறிப்பிட்ட சின்னத்தைக் கண்டறிந்தனர். அந்தச் சின்னம் கணிதத்தில் வரும் கூட்டல் குறியீட்டின் முனைகளில் கொக்கிகளை போல வளைந்து இருந்தது. எனவே அதை 'கொக்கி சிலுவை' (Hooked Cross) என அழைத்தனர். அந்த சின்னத்தை பயன்படுத்தியவர்கள் அதற்கு என்ன பெயர் வைத்து அழைத்தார்கள் என்று நமக்கு தெரியாது. எனவே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதன் வடிவத்தை அதற்கு ஒரு விளக்கமான பெயரை கொடுத்திருக்க வேண்டும் என யூகிக்கலாம்.

இந்தச் சின்னம் ஐரோப்பாவில் மிகவும் பரவலாகி ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் இதை கிறிஸ்தவ சிலுவையின் ஒரு அடையாளமாக பயன்படுத்த தொடங்கினார்கள். இது இறப்பின் மீதான இயேசு கிறிஸ்துவின் வெற்றியைக் குறிக்கும் சின்னமாக பயன்படுத்தப்பட்டது. இந்த 'கொக்கி சிலுவை' கிறிஸ்துவ பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக ஏற்படுத்தப்பட்டு அதன் கலை மற்றும் கட்டிடக் கலைகளில் கூட இணைக்கப்பட்டது. உதாரணமாக ஆஸ்திரியாவில் உள்ள லாங் பேக் அவே.

இந்த அடையாளம் ஐரோப்பா முழுவதும் 'கொக்கி சிலுவை' என்றே அறியப்பட்டது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு இருந்தது-இங்கிலாந்து.

'சூப்பர் இனம்' என்ற கற்பனை உருவாக்கம்:

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கொக்கி சிலுவையை கண்டறிந்தது, ஐரோப்பிய கல்வியாளர்களின் கற்பனை குதிரையை தட்டி விட்டது. அவர்கள் ஏகாதிபத்தியதிற்கு உதவி செய்ய பிரச்சார பொருட்களை உருவாக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உதாரணமாக மேக்ஸ் முல்லர், ஏகாதிபத்திய சக்திகள் இந்திய துணைக்கண்டத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு 'நியாயமான' காரணத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தார்.

மொழியியலாளர் ஆக இருந்த மில்லர் ஐரோப்பிய மொழிகளுக்கு இடையே உள்ள சில வார்த்தைகளில் உள்ள ஒற்றுமைகளைக் கண்டு அவை எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான தோற்றம் உண்டு என்றும் அதைப் பேசியவர்களை 'ஆரியர்கள்' , 'சூப்பர் இனம்' என்று அழைத்தார். 'ஆரியர்' என்ற பெயரை கிழக்கு நாகரீகங்களில் இருந்து அவர் கடன் வாங்கினார். அவருடைய கற்பனைப் படி, ஆரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள், அப்படியே இந்தியத் துணைக் கண்டத்தில் வந்து சேர்ந்தனர். இந்தக் கோட்பாடு, ஆரியர்கள் தான் பழமையான கிழக்கு நாகரிகங்களை உருவாக்கியதாகவும் அங்கே இருந்த பழங்குடி மக்களுக்கு அதில் பங்கில்லை என்றும் அனுமானித்தது. இந்தக் கோட்பாடு மிகவும் சர்ச்சைக்குரியது. இது மிகவும் காலாவதியான மேலாதிக்க வெறியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு அல்லது புதிய உலக கலாச்சார சாதனைகளுக்கு, மேற்கத்திய அடிப்படைத் தோற்றமே இருக்க வேண்டும் என்ற மேலாதிக்கத்தை இது ஊக்குவிக்கிறது.

ஆங்கிலேயர்கள் இந்தக் கற்பனையான 'சூப்பர் இனம்' என்ற கோட்பாடை உபயோகப்படுத்தி இந்திய துணைக்கண்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட 'கொக்கி சிலுவையின்' வடிவத்தில் இருக்கும் சின்னம், ஐரோப்பாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சின்னம் தான் என்ற முடிவுக்கு வந்தனர். இது ஒரு கொடிய தவறாகும். இது எவ்வளவு பெரிய தவறு என்றால் கிழக்கு நாடுகளில் இந்தச் சின்னத்தை வணங்கும் மக்கள் இன்னமும் இதற்கான விலையை கொடுத்து வருகின்றனர். ஆங்கிலம் பேசும் கல்வியாளர்கள், ஐரோப்பாவின் கொக்கி சிலுவையை தவறாக பெயரிட்டனர். ஒவ்வொரு ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடும் அதை அவரவர் மொழிகளில் 'கொக்கி சிலுவை' என்றே அழைத்து வந்தாலும் ஆங்கிலேயர்கள் அதை 'ஸ்வஸ்திகா' என பெயரிட்டனர்.

மேற்கண்ட நிகழ்வுகளின் தொடர்ச்சி கிழக்கு நாகரீகங்களில் வாழும் மக்களை மிகவும் சங்கடத்துக்கு உள்ளாக்குகிறது. 'ஸ்வஸ்திகா' பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியாக உபயோகத்தில் இருக்கிறது. பில்லியன் கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தர்களுக்கு இது ஒரு நேர்மறையான புனித அடையாளமாகும். 'சிலுவை' கிறிஸ்தவர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு 'ஸ்வஸ்திகா' நமக்கு முக்கியம். இந்த 21ம் நூற்றாண்டில், சுவஸ்திகாவை பல தலைமுறைகளாக வணங்கி வந்தவர்கள், ஆங்கிலேயர்கள் இதை தவறாக பெயரிட்டனர் என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் புனித சின்னத்தை விட்டு விடும்படி உத்தரவிடப்படுகிறார்கள். கிறிஸ்தவத்திற்கு முந்தைய ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோட்டிற்கு சமஸ்கிருத பெயர் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. தற்செயலைத் தவிர, இந்திய சின்னத்திற்கும், ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஒன்றிற்கும் வேறு எதுவும் தொடர்பு இருப்பதாக எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை.

இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் யோசிக்கலாம் என்ன அந்த கேள்விகள் என்று. கேள்விகள் எளிதானவை. ஸ்வஸ்திகாவை ஆழ்ந்த மத மற்றும் ஆன்மிக சின்னமாக வணங்கி வரும் மக்கள் அதை விட்டு விட வேண்டுமா? ஏகாதிபத்திய சக்திகள் மோசமான உள்நோக்கங்களுடன் அதற்குத் தவறாகப் பெயரிட்டதற்கு நாம் இன்னமும் விலை கொடுக்க வேண்டுமா? ஏகாதிபத்தியத்தை பல ஆண்டுகள் தாங்கிக் கொண்ட நாம் இன்னும் எத்தனை காலம் தான் விலை கொடுப்பது?


நன்றி: tfipost.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News