கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சட்டப்பேரவையை ஒத்திவைக்க அவசியமில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சட்டப்பேரவையை ஒத்திவைக்க அவசியமில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!

இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கொரோனா வைரஸை சுட்டிக்காட்டி, இந்த "சூழலில் சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பி, அவையை ஒத்திவைக்க வேண்டும்" என வலியுறுத்தினார், இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது இதனால் யாரும் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவையை ஒத்திவைக்க அவசியமில்லை" என தெரிவித்தார்.
எந்தெந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அத்தனை நடவடிக்கைகளும் அரசு எடுத்திருப்பதாகவும், தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறிய 'முதலமைச்சர்', இதில் யாரும் அச்சப்படத் தேவையில்லை, சட்ட சபையை ஒத்திவைக்க அவசியமும் இல்லை, முழு பாதுகாப்பு அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தேவைப்பட்டால் அனைத்து உறுப்பினர்களுக்கும் மருத்துவ பரிசோதனை உட்படுத்த தயார்! அதுமட்டுமில்லாமல் சட்டசபைக்கு வரும் அனைத்து உறுப்பினர்களையும் பரிசோதனைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கின்றனர், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.