Kathir News
Begin typing your search above and press return to search.

இவர்கள் இப்படி.....? நீங்கள் எப்படி....?

இவர்கள் இப்படி.....? நீங்கள் எப்படி....?

இவர்கள் இப்படி.....? நீங்கள் எப்படி....?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 March 2020 10:15 AM IST

மனதிடம் மிக்கவர்கள் தங்களின் கட்டுபாட்டை இழப்பதில்லை. தங்கள் உணர்வுகளை யாரின் கட்டுபாட்டுக்குள்ளும் கொண்டு செல்வதில்லை. "என்னை இவர் ஏமாற்றிவிட்டார்..., எனக்கு இன்னார் துரோகம் விளைவித்து விட்டார், இவரால் தான் நான் தோல்வியை தழுவினேன்" என்பது போன்ற பிறரை குறித்த விமர்சனங்கள் இவர்களின் வாழ்வின் இருக்காது. காரணம் இவர்களுக்கு தெரியும் இவர்களின் வெற்றிக்கும், தோல்விக்கும், சாதனைக்கும் சறுக்கல்களுக்கும் இவர்களே காரணமன்றி பிறராக இருக்க இயலாது என்று.

மனதிடம் மிக்கவர்கள் துன்பத்தில் அதிக நேரம் உழல மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு தெரியும் அது நேரத்தை வீணடிக்கும் செயலென்று. வாழ்வில் வெல்ல வேண்டுமெனில் தோல்விக்கும், தாமத்திற்க்கும் பொறுப்பேற்று அடுத்த செயலை முனைய வேண்டுமேயன்றி வருந்துவதால் எந்த பயனும் இல்லை.

மனதிடம் மிக்கவர்கள் மாற்றத்தை வரவேற்பவர்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அனைவரும் அறிந்த பழமொழி என்றாலும் தீர்ந்துவிட்ட பேனாவை மாற்றுவதற்க்கு கூட நான்கு நாட்கள் வேதனை கொள்ளும் மனிதர்கள் உண்டு. ஆனால் மனவலிமை மிக்கவர்கள் நேர்மறை மாற்றங்களை, தேவையான மாற்றங்களை இரு கரம் விரித்து வரவேற்க்கும் தன்மையாளர்கள்.

மனதிடம் மிக்கவர்கள் தங்களால் மாற்ற இயலாததை எண்ணி கவலை கொள்வதில்லை. ஏனெனில் நம்மால் எதையும் மாற்ற இயலாது. நாமும் விரும்பும் மாற்றத்திற்க்கு ஏற்றவாறு நம்மை மாற்றிகொள்வதே புத்திசாலித்தனம் என்ற யுத்தியை அறிந்தவர்கள்.

மனதிடம் மிக்கவர்கள் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமானவர்களாய் நடைமுறையில் இருக்க இயலாது என்பதை அறிந்தவர்கள். தேவையான இடங்களில் மறுத்து பேசும் திறன் பெற்றவர்கள். ஒரு முடிவால் ஒருவர் வருத்தம் கொள்கிறாரெனில் அந்த கடினமான சூழலை கையாள தெரிந்தவர்கள். காரணம் அவருடைய இலக்கு அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதல்ல. தேவையான முடிவுகளை சரியான தருணத்தில் எடுப்பது.

மனதிடம் மிக்கவர்கள் கடந்த காலத்தில் கரைவதில்லை. அவர்கள் கடந்த காலத்தில அவர்களுக்கு நிகழ்ந்தவைகளை மனமார ஏற்கிறார்கள். அதில் கிடைத்த வெற்றிகளின், தோல்விகளின் பாடத்தை மட்டும் நினைவில் வைத்து சுலபமாக கடந்த காலத்தை கடந்து செல்கிறாகள். கடந்த காலத்தின் நினைவுகளில் திளைத்து நிகழ்காலத்தை தொலைக்கும் தவறுகளை அவர்கள் செய்வதில்லை.

மனதிடம் மிக்கவர்களுக்கு தனிமை ஒருபொருட்டல்ல. தனிமையில் இருக்கும் தருணங்களை கொண்டாடுகிறாகள். மேலும் பல செயல்களை செய்வதற்கான உற்சாகத்தை பல வழிகளில் பெருக்கி கொள்கிறார்கள். தாம் மகிழ்ச்சியாக இருக்க எந்த பொழுதுபோக்கு அம்சமோ அடுத்தவரினுடைய அருகாமையோ அவர்களுக்கு தேவையாய் இருப்பதில்லை.

மனதிடம் மிக்கவர்கள் தங்களை பிறர் கவனித்து கொள்ள வேண்டும் என்று அங்கலாய்பதில்லை. காரணம் அவர்களுக்கு தெரியும் இந்த சமூகமோ, குடும்பமோ, நண்பர்களோ உறவினர்களோ அவர்களுக்கு எப்போதும் சொந்தமானவர்கள் அல்ல என்பது. தங்களை தாங்களே கவனித்து கொள்ள தெரிந்தவர்கள். பிறர் தம்மை கவனித்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை துறந்தவர்கள்.

மனதிடம் மிக்கவர்களுக்கு 'உடனடி' வெற்றியில் நம்பிக்கையற்றவர்கள். இந்த உடனடி மந்திரம் காபிக்கு ஒத்துவரலாம். வாழ்க்கைக்கு அல்ல என்பதை புரிந்தவர்கள். சொந்தமாக தொழில் துவங்கும் போது, ஒரு பழக்கத்தை புதிதாக செய்ய முனையும் பொழுது, என பல சூழல்களில் உடனடி வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் அல்ல. நிதர்சனமான வெற்றி அதற்கான நேரத்தை அமைத்து கொள்ளும் என்பதை நம்புவர்கள்.

நீங்கள் எப்படி......?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News