நம் அன்றாட உணவே மருந்தாக இருக்கும் அதிசயம்! இந்த இரு பொருள்களில் இத்தனை பலன்களா ?
நம் அன்றாட உணவே மருந்தாக இருக்கும் அதிசயம்! இந்த இரு பொருள்களில் இத்தனை பலன்களா ?

பூண்டு நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் ஒரு சாதாரண பொருளாகும். ஆனால் இதற்கு அதீதமான மருத்துவ மற்றும் ஆன்மிகம் சார்ந்த குணங்கள் இருக்கின்றன.
தேன் மற்றும் பூண்டு ஆகிய இரண்டும் மனிதனின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிபவையாக இருக்கிறது. பொதுவாக தேன் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது, பூண்டு இதயத்திற்கு நல்லது இவை இரண்டும் கலவையாக சேர்த்து உண்டால் நிறைய நன்மைகளை நாம் பெற முடியும். தேன் வெள்ளை சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்று. இது உடலில் சருமத்தை பிரகாசமாகி தோல் நோய்களை குணப்படுத்துகிறது. தேனை தண்ணீரில் கலந்து உண்பது குளுக்கோஸை குடிப்பதற்கு சமமான சக்தியை தருகிறது. காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த பூண்டை உட்கொண்டால் நாம் உண்ணும் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது, உணவில் உள்ள கொழுப்புகளை எளிதில் கரைக்க மற்றும் கடினமான உணவுகளை ஜீரணிக்க இந்த தேன் கலந்த பூண்டு உதவுகிறது. இந்த கலவை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது சருமத்தில் முகப்பரு வராமல் காத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடை குறைப்பதற்கு இந்த தேன் கலந்த பூண்டு சிறந்த உணவாகும்.
மேலும் ஒற்றை தலை வலி போன்ற உபாதைகளுக்கு இந்த தேன் கலந்த பூண்டு பெரிதும் உதவுகிறது. மேலும் வெறும் வயிற்றில் இதை உண்ணும்போது "கார்டிசோல்" என்கிற திரவம் உடலில் அதிகம் சுரப்பதை தவிர்த்து பசியை குறைகிறது. மேலும் இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இரவு உறங்கும் பொது இரண்டு பூண்டு பற்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கும் பூண்டு உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. வெளியே செல்லும் பொது நான்கைந்து பூண்டு பற்களை பையில் எடுத்து சென்றால் எந்த காரியத்திற்கு செல்கிறோமா அந்த காரியம் வெற்றி பெரும். பண்டைய கால ரோமானியர்கள் போருக்கு செல்வதற்கு முன் பூண்டை வாயில் போட்டு அடக்கி கொண்டு செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. பொதுவாக ஆன்மீக சாதனையில் இருப்பவர்கள் பூண்டை அசுத்தமான உணவாக கருதி உட்கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆன்மீக சாதனையில் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த பூண்டு அளவிட முடியாத பயன்களை தருகிறது என்பது உண்மை.