Kathir News
Begin typing your search above and press return to search.

89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை கையாண்டு புதிய சாதனை - அடுத்த கட்டத்தை எட்டிய தமிழக துறைமுகம் !

89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை கையாண்டு புதிய சாதனை - அடுத்த கட்டத்தை எட்டிய தமிழக துறைமுகம் !

89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை கையாண்டு புதிய சாதனை - அடுத்த கட்டத்தை எட்டிய தமிழக துறைமுகம் !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Sep 2019 2:33 PM GMT


வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு தளம் ஒன்பதில் 89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.


பனமா நாட்டு கொடியுடன் எம்.வி. என்பிஏ வேர்மீர் (MV NBA VERMEER) என்ற இக்கப்பல் 234.98 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும் மற்றும் 14.16 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. இக்கப்பல் அமெரிக்கா நாட்டிலுள்ள பால்டிமோர் (Baltimore) என்ற துறைமுகத்திலிருந்து 89,777 டன் நிலக்கரியை இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு எடுத்து வந்துள்ளது. இதற்கு முன்பு 25.07.2019 அன்று எம்.வி. காமாக்ஸ் எம்பரர் (MV KMAX EMPEROR) என்ற கப்பலின் மூலம் 85,224 டன் சுண்ணாம்புக் கல் கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இக்கப்பல் சரக்குதளம் 9-ல் நாள் ஒன்றுக்கு 50,000 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் சரக்குகள் கையாளப்படுகிறது. இக்கப்பலின் முகவர்கள் பென் லைன் ஏஜென்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டிவிடோர் செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி.


வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டு ஆகஸ்ட் 2019 வரை 5.26 மில்லியன் டன் நிலக்கரியை கையாண்டுள்ளது. (கடந்த நிதியாண்டு ஆகஸ்ட் 2018 வரை 5.21 மில்லியன் கையாளப்பட்டது). வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து 14 மீட்டர் மிதவை ஆழமுடைய பெரிய கப்பல்களை கையாளுவதினால் தென்தமிழகத்தின் சர்வதேச கடற்வாணிபத்தின் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது


Next Story
கதிர் தொகுப்பு
Trending News