Kathir News
Begin typing your search above and press return to search.

மணாலியில் உள்ள திபெத்திய சமூகம், இந்திய இராணுவத்தை கொடிகள் அசைத்து உற்சாகப்படுத்தும் காணொளி.! #Tibet #IndianArmy #China

மணாலியில் உள்ள திபெத்திய சமூகம், இந்திய இராணுவத்தை கொடிகள் அசைத்து உற்சாகப்படுத்தும் காணொளி.! #Tibet #IndianArmy #China

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2020 12:22 PM GMT

சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்ட வீடியோ கிளிப்களில், மணாலியில் வசிக்கும் திபெத்திய சமூகம் இந்திய ராணுவத்தை உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது. இந்தியப் படையினருக்கு திபெத்திய கொடிகள், வெள்ளைத் துணிகள் மற்றும் மணம் கொண்ட மூலிகைகள் நிரம்பிய சாம்பிராணி கொளுத்தி வரவேற்றனர். எல்லைக்கு செல்லும் இந்திய இராணுவப் படையினரை திபெத் சமூக உறுப்பினர்கள் மனதார வரவேற்றனர். திபெத்திய கொடி நல்லெண்ணம், அமைதி, வலிமை மற்றும் ஞானத்தைக் கொண்டுவருவதாக நம்பப்படுவதால் இந்த செயல் முக்கியத்துவம் பெறுகிறது.

மணாலியில் உள்ளவர்கள் இந்திய ஆயுதப்படைகளை உற்சாகப்படுத்தும் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.




இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வரலாற்று ரீதியாக எந்த எல்லையும் கிடையாது. இந்திய எல்லை பெரும்பாலும் திபெத்துடனும், கொஞ்சம் மத்திய ஆசிய கிழக்கு துர்கிஸ்தான் உடன் மட்டுமே உண்டு. 1949-ல் கம்யூனிஸ்ட் சீனா, திபெத்தைக் கைப்பற்றியது. மேலும் ஜின்ஜியாங் மற்றும் சில மாகாணங்களையும் சீனாவிற்குள் விழுங்கியது. புத்த மதத்தை பின்பற்றும் திபெத்தை, சீனா கைப்பற்றியது 20-ஆம் நூற்றாண்டின் சோகங்களில் ஒன்றாகும். திபெத் நம்முடன் கலாச்சார,மத, வரலாற்று ரீதியில் பெரும் பிணைப்புகளைக் கொண்ட ஆயிரம் காலத்து அண்டை நாடாகும். இதில் இன்னும் கொடுமையாக, ஆசியாவில் பாயும் நதிகளில் 9 நதிகள் திபெத்தில் உருவாகின்றன. கம்யூனிஸ்ட்கள் கட்டுப்பாட்டிற்கு அவை சென்றன.

இன்று திபெத் தலைவர் தலாய் லாமாவின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News