Kathir News
Begin typing your search above and press return to search.

உபி : டிக்டோக்கில் வைரல் ஆக, தேசியக் கோடியை எரித்த நான்கு இளைஞர்கள் - ஒரு மைனர் சிறுவன் கைது.! #TikTok #UP #NationalFlag

உபி : டிக்டோக்கில் வைரல் ஆக, தேசியக் கோடியை எரித்த நான்கு இளைஞர்கள் - ஒரு மைனர் சிறுவன் கைது.! #TikTok #UP #NationalFlag

உபி : டிக்டோக்கில் வைரல் ஆக,  தேசியக் கோடியை எரித்த நான்கு இளைஞர்கள் - ஒரு மைனர் சிறுவன் கைது.! #TikTok #UP #NationalFlag

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Jun 2020 2:23 PM GMT

சீக்கிரம் பாப்புலர் ஆக வேண்டும் என்று பல இளைஞர்கள் இப்போதெல்லாம் சீன சமூக ஊடக ஆப்பான டிக்டோக்கில் தாக்குதல் மற்றும் வன்முறை வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவத்தில், டிக்டோக் வீடியோவை வைரலாக மாற்ற உத்தரப்பிரதேசத்தின் லக்னோவின் பஜர்கலா பகுதியில் நான்கு இளைஞர்கள் இந்திய தேசியக் கொடியை எரித்ததாகவும், தேச விரோத கோஷங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை லக்னோவின் பஜர்கலாவில் உள்ள டிக்கிட் ராய் தலாப் அருகே ராஜாஜிபுரத்தில் வசிக்கும் ரவிகாந்த் சிங் என்ற நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ​​நான்கு இளைஞர்கள் தேசியக் கொடியை எரித்து, தேச விரோத கோஷங்களை எழுப்பினார்கள். ரவிகாந்த் சிங் நான்கு இளைஞர்களை எதிர்கொண்டபோது, ​​அவர்கள் அவரைத் தாக்கினர். சலசலப்பைப் பார்த்த ரூபேஷ் குப்தா என்ற மற்றொரு நபர் தலையிட்டார். ரவிகாந்த் மற்றும் ரூபேஷ் ஆகியோர் மைனர் பையனைப் பிடிக்க முடிந்தது, மற்ற மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு கூட்டமும் விரைவில் அங்கு கூடி, மைனர் பையனை பசர்கலா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது, அங்கு காவல்துறையினர் அவரைக் காவலில் எடுத்து ரவிகாந்த் சிங்கின் புகாரின் அடிப்படையில் நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர், அவர் மைனர், மற்ற மூன்று பேரைத் தேடி வருகிறார்கள். உள்ளூர்வாசிகள் தலையிட்டு அவர்களைப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட மைனர், டிக்டோக் வீடியோ வைரல் ஆக இந்தியக் கொடியை எரித்ததாகவும், தேசிய விரோத கோஷங்களை எழுப்பியதாகவும் ஒப்புக் கொண்டார். 124 (ஏ), 153 (ஏ), 504, 505 (1) (பி) (2), 352, 325, 506 மற்றும் ராஷ்டிரிய கவுரவ் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 2 ஆகியவற்றின் கீழ் கடுமையான IPC பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் சமாஜ்வாடி கட்சித் தலைவரின் சகோதரர்/சகோதரி மகன் (nephew) கைது செய்யப்பட்ட மைனர் என்று பஸர்கலா அதிகாரி பொறுப்பாளர் விஜயேந்திர சிங் கூறியதாக பல ஊடக அறிக்கைகள் மேற்கோளிட்டுள்ளன. இருப்பினும், ஓபினியா பஜர்கலா காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டபோது, ​​போலிசார் அந்தத் தகவலை மறுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஒரு மைனர் பையன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர், அதே நேரத்தில் தப்பி ஓடிய மற்ற மூன்று நபர்களுக்காக தேடுதல் நடைபெற்று வருகிறது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பலர் பஜர்கலா காவல் நிலையத்திற்கு வெளியே கூடி, முன்னாள் சமாஜ்வாடி கட்சித் தலைவரின் உறவினர் என்று கூறிய பையனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தின் கோரிக்கையை ஏற்க போலிசார் மறுத்து, கைது செய்யப்பட்ட சிறுமியை ஒரு சிறார் வீட்டிற்கு அனுப்பினர்.

தப்பி ஓடிய மூன்று குற்றவாளிகள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் தேடுதல் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நியூஸ் 18 செய்தியின்படி, இன்ஸ்பெக்டர் பிரிஜேந்திர சிங் தெரிவித்தார்.

சீன சமூக ஊடக ஆப் டிக்டோக் வன்முறை மற்றும் குற்றங்களைத் தூண்டுவதற்காக சமூக விரோத சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு சமீபத்தில் கடுமையான கண்டனங்களைப் பெற்று வருகிறது.

Source: News18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News