Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா தடை எதிரொலி : தலைமையகத்தையே சீனாவுக்கு வெளியே மாற்ற டிக்டோக் ஆலோசனை.! #TiktokBan #China

இந்தியா தடை எதிரொலி : தலைமையகத்தையே சீனாவுக்கு வெளியே மாற்ற டிக்டோக் ஆலோசனை.! #TiktokBan #China

இந்தியா தடை எதிரொலி : தலைமையகத்தையே சீனாவுக்கு வெளியே மாற்ற டிக்டோக் ஆலோசனை.! #TiktokBan #China

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 July 2020 2:06 AM GMT

வீடியோ பகிர்வு அப்ளிகேஷன் டிக்டோக், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தீவிர எதிர்ப்பையும், தடையையும் எதிர்கொண்ட பின்னர், அதன் தாய் நிறுவனமான 'பைட் டான்ஸ்' அதன் கார்ப்பரேட் கட்டமைப்பை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தகவல்களின்படி, சீன இணைய நிறுவனங்களின் மூத்த நிலை நிர்வாகி, டிக்டோக்கிற்கான புதிய நிர்வாகக் குழுவை உருவாக்குதல் அல்லது சீனாவிற்கு வெளியே தலைமையகத்தை நிறுவுதல் போன்ற முடிவுகளை ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

"முன்னோக்கி செல்லும் பாதையைப் பற்றி நாங்கள் யோசிக்கும் போது, ​​பைட் டான்ஸ் அதன் டிக்டோக் நிறுவன கட்டமைப்பில் மாற்றங்களை மதிப்பீடு செய்கிறது. படைப்பாற்றலை ஊக்குவிக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு தளத்தை நாங்கள் உருவாக்குவதால் எங்கள் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று கூறியுள்ளார்.

லடாக்கில், உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (LAC) நடந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக 59 சீன அப்ளிகேஷன்களை நரேந்திர மோடி அரசாங்கம் தடை செய்தது. இந்தத் தடை பைட் டான்ஸுக்கு 6 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

கூடுதலாக, தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா டிக்டோக்கை தடைசெய்த பின்னர், அமெரிக்காவும் டிக்டோக் அணுகலை குறுக்கியது (restricted) இங்கே குறிப்பிடத்தக்கது.

Source: The Economic Times

Next Story