காய்ச்சல், இருமல், சளி இருந்தால் சரியான பிறகே கோவிலுக்கு வாருங்கள்! பக்தர்களுக்கு திருப்பதி கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள்!
காய்ச்சல், இருமல், சளி இருந்தால் சரியான பிறகே கோவிலுக்கு வாருங்கள்! பக்தர்களுக்கு திருப்பதி கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில்,
தினமும் ஆயிரக்கணக்கான, சில சமயங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தேவஸ்தான கூடுதல் இணை செயல் அலுவலர் தர்மாரெட்டி பேசுகையில் " ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் சரியான பிறகு வரலாம். மருத்துவ குழுவினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டும். பக்தர்கள் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்து, அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி சேனலில் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என கூறினார்.