திருப்பூரில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்திற்கு வந்த இந்துக்களின் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்!
திருப்பூரில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்திற்கு வந்த இந்துக்களின் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல்!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, திருப்பூர் மங்கலத்தில், நடந்த பொதுக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், அவர்கள் மீது ஒரு சில இஸ்லாமியர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, திருப்பூர் மங்கலத்தில், நடந்த பொதுக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் வேலுார் இப்ராஹிம், தமிழகம் மற்றும் புதுச்சேரி முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் தலைவர் பாத்திமா அலி, விவசாயிகள் சங்கம் ஈஸ்வரன், ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தவர்களை, கணபதிபாளையம் பிரிவு, குக்கிலிபாளையம் பகுதியில் மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர்.
இரவு, 9:00 மணிக்கு கூட்டம் முடிந்தநிலையில், பங்கேற்ற பொதுமக்களை, மங்கலம்-திருப்பூர் ரோடு, மங்கலம்-பல்லடம் ரோடு வழியாக செல்லக்கூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, கல்வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், குறிப்பிட்ட சாலை வழியாக செல்ல அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தியும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், மங்கலம் நால் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.