Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 11:18 AM GMT

சில நாட்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் பணிபுரிவோருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் 84 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள்‌ ஆளுநர் மாளிகையின் மையக் கட்டிடத்தில் பணிபுரிபவர்கள் அல்ல என்றும் வெளிப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து ஆளுநரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றும் உறுதியளித்தனர். எனினும் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஆளுநரை அறிவுறுத்தி இருந்தனர். அதே போல் ஆளுநரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.

தற்போது இரண்டாவது கட்டமாக கொரோனா தொற்று அறிகுறியுடன் இருப்பவர்கள் மற்றும் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 38 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் ஆளுநரின் உதவியாளர் உட்பட மேலும் மூன்று பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து இன்று காலை ஆளுநர் சென்னை ஆழ்வார்புரத்தில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Next Story