வாபஸ் வாங்கிய பிறகும் போராட்டத்தை மீண்டும் தூண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!
வாபஸ் வாங்கிய பிறகும் போராட்டத்தை மீண்டும் தூண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

உலகை மிரட்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து இஸ்லாமிய மக்களின் மன நிலையை புரிந்து கொண்டு CAA எதிர்ப்பு போராட்டத்தை நிறுத்திவிட பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நடத்தி வரும் போராட்டங்களை கொரோனாவை முன்னிட்டு ஒத்திவைக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜாமொய்தீன் பாகவி இந்த கோரிக்கையை வைத்தார்.
இதனையடுத்து 33 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் வண்ணாரப்பேட்டை போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக போராட்ட குழு தலைவர் லத்திப் அறிவித்தார். இறுதியில் தேசிய கீதம் பாடி முடிந்தவுடன் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கோடிக்கணக்கான நிதி பெற்று அதன் மூலம் ஏழை இஸ்லாமிய மக்களை போராட்டத்துக்கு தூண்டி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, போராட்டத்தை கைவிடக் கூடாது என்றும் கொரோனாவை விட கொடூரமானது என்.பி.ஆர் எனக் கூறி ஏழை இஸ்லாமியர்களை மீண்டும் போராட்டத்தை மீண்டும் தூண்டி வருகிறது.
மேலும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் காஜாமொய்தீன் பாகவி மற்றும் போராட்டத்தை வாபஸ் பெற்ற லத்திப்பின் முடிவை இந்த அமைப்பு ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.