Kathir News
Begin typing your search above and press return to search.

பட்டையை கிளப்பும் மோடி அரசு! தமிழக மாலுமியை மீட்கக்கோரிய முதல்வர் கடிதத்திற்கு 3 மணி நேரத்தில் பதில்! “அவர்கள் நலமாக உள்ளனர்”!!

பட்டையை கிளப்பும் மோடி அரசு! தமிழக மாலுமியை மீட்கக்கோரிய முதல்வர் கடிதத்திற்கு 3 மணி நேரத்தில் பதில்! “அவர்கள் நலமாக உள்ளனர்”!!

பட்டையை கிளப்பும் மோடி அரசு! தமிழக மாலுமியை மீட்கக்கோரிய முதல்வர் கடிதத்திற்கு 3 மணி நேரத்தில் பதில்! “அவர்கள் நலமாக உள்ளனர்”!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2019 11:44 AM GMT



ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஆதித்ய வாசுதேவன் என்ற மாலுமி உள்பட 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கடிதம் அனுப்பினார்.


இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த மாதம் 19-ஆம் தேதி இம்பெரோ என்ற கப்பலில் ஆதித்யா உள்பட 18 இந்தியர்கள் சென்ற போது ஈரான் அருகேயுள்ள ஹார்மோஸ் நீரிணை பகுதியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதித்ய வாசுதேவன் உள்பட சிறைபிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.




https://twitter.com/CMOTamilNadu/status/1157540688826785792



இந்த கடித்தத்தின் நகலை முதல்வர் பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை 11.36 மணிக்கு பதிவேற்றம் செய்திருந்தார்.


இந்த கடிதம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்னும் சென்றடையாத நிலையில் டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பார்த்த ஜெய்சங்கர், 3 மணி நேரத்திற்கு உள்ளாக பதில் அளித்துள்ளார். அதாவது பிற்பகல் 3.43 மணிக்கு முதல்வர் பழனிச்சாமிக்கு பதிலளித்துள்ளார்.


அந்த பதிலில், “ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம். இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம். தெஹ்ரானில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் மாலுமிகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிகிறது.” என்று பதிலளித்துள்ளார்.




https://twitter.com/DrSJaishankar/status/1157602874303504384



வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது பதிலை தமிழிலும், ஆங்கிலத்திலும் பதிவிட்டு உள்ளார்.


மோடி அரசின் செயல்பாட்டு வேகம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.


Next Story