ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா வைரஸ் !
ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகருக்கு கொரோனா வைரஸ் !

இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்ற டாம் ஹங்ஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டொம் ஹாங்க்ஸ். இவர் இரண்டு முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். அவருக்கு கொரோனா பதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்: நானும் என்னுடைய மனைவி ரீட்டாவும் பட தயாரிப்பு வேலைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தோம். அங்கு சென்ற உடன் எனக்கு லேசான உடல் சோர்வு, சளி தொல்லை வந்தது. அதேபோல என்னுடைய மனைவிக்கும் காய்ச்சல் வந்தது.
இதனை தொடர்ந்து நாங்கள் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்ததில் எங்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு சிகிச்சையில் உள்ளோம் என பதிவு செய்திருந்தார். இவர் பாரஸ்ட் கம்ப் மற்றும் பிலாடெல்பியா இந்த இரண்டு படங்களுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார்.