போதை பொருள் விலையேறியது என்று பிரதமர் மோடியை டிக்-டாக்கில் அவதூறாக விமர்சித்த வாலிபர் - கூண்டோடு தூக்க காத்திருக்கும் காவல்துறை!
போதை பொருள் விலையேறியது என்று பிரதமர் மோடியை டிக்-டாக்கில் அவதூறாக விமர்சித்த வாலிபர் - கூண்டோடு தூக்க காத்திருக்கும் காவல்துறை!

போதை வாஸ்துகள் விலையேறி விட்டது என்று கூறி, பிரதமரைப்பற்றி டிக்-டாக் செயலியில் அவதூறாக கருத்து வெளியிட்ட அரவிந்த் என்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி சார்ப்பில் மாவட்டத் தலைவர் கௌதம், காவல் ஆணையர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், நான் பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணியின் மாவட்ட தலைவராக உள்ளேன். 23.04.20 ம்தேதி காலை சுமார் 11.00 மணியளவில் "டிக் டாக் " செயலி ஒளி பதிவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தன் நண்பர்களுடன் இணைந்து பேட்டி கொடுப்பது போல் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கடை திறக்க முடியல கூல் லிப் பணம் ரூ.100 என்றும் விலை வாசி ஏறி விட்டது சிகரெட் 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.இதனால் தம் சரக்கு போன்றவற்றை பயன்படுத்த முடியவில்லை என சொல்லி மிரட்டியும், பலகோடி மக்கள் வாக்களித்த தேர்ந்தொடுத்த மரியாதைக்குரிய பாரத பிரதமரை தகாத வார்த்தையால் திட்டி ஆசமாக அருவறுப்பாக பேசி உள்ளார். அவர்களை யாரென்று விசாரித்த போது பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த செந்தில்குமார் மகன் அரவிந்த், பீமநகர் கண்டித்தெருவை சேர்ந்த பசீர் முகமது யக்கியா மற்றும் பீமநகர் பக்காளி தெருவை சேர்ந்த சையது முஸ்தபா மகன் நியாஸ் என்பதும் தெரியவந்தது.
இதில் வீடியோவில் பேசியவர் யக்கியா என்பதும் வீடியோவை எடுத்தவர் அரவிந்த என்பதும் மைக் போன்று நீட்டியவர் நியாஸ் என்பதும் கேள்வி கேட்டவர்கள் அரவிந்த் மற்றும் நியாஸ் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் பீமநகர் பாலத்தில் வைத்து இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள். ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அரவிந்த் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு அரசுக்கு எதிராக இவ்வாறு அசிங்கமாக நடந்து கொண்டு உள்ளார். இந்த வீடியோ (TIK TOK) @ nithiarvind என்ற ID யில் https://drive.google.com/ fileid/1WiUw-2u6-19669r MgNBGW7q 9glasFulb/viewpusp= drivesdk என்ற லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரை அவதூறாக பேசிய அரவிந்த மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் இவர்கள் பேசிய வீடியோ காட்சியை இணைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.