Kathir News
Begin typing your search above and press return to search.

சபாஷ்!! சரியான முடிவு - காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அரசியல் பிரபலம் துளசி கபார்ட் கூறிய கருத்து.!

சபாஷ்!! சரியான முடிவு - காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அரசியல் பிரபலம் துளசி கபார்ட் கூறிய கருத்து.!

சபாஷ்!! சரியான முடிவு - காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அரசியல் பிரபலம் துளசி கபார்ட் கூறிய கருத்து.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Sep 2019 9:02 AM GMT


2020ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடவுள்ள துளசி கபார்ட் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


37 வயதான ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசி கபார்ட், அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி என்ற பெயரைப் பெற்றவர்.அனால் இவர் இந்தியர் இல்லை.இவர் சமோக தீவுகளை சேர்ந்த கத்தோலிக்க மதத்தை போதிக்கும் தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவர். இந்து மதத்தின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக இவர் இந்து மதத்திற்கு மதம் மாறியவர்.


அவரது, 21-வது வயதில் செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நடுவில் பதவியை விடுத்து ஈராக்கில் போர் நடக்கும் பகுதியில் பணி புரிந்தார். 2012-ம் ஆண்டு மீண்டும் ஜனநாயக கட்சியால் திரும்ப அழைக்கப்பட்டார். அமெரிக்கா அரசியலில் மிகவும் பிரபலமானவர் துளசி கபார்ட்.


துளசி கபார்ட் 2020ஆம் ஆண்டிற்கான அமெரிக்க தேர்தலில் போட்டியிடுவாராயின் வெள்ளை மாளிகை அறிவிக்கும் தேர்தல் போட்டியில் பிரதான கட்சி சார்பாக போட்டியிடும் முதல் இளம் இந்து பெண் என்ற பெருமையும், ஜனாதிபதி தேர்தலில் துளசி கபார்ட் வெற்றி பெற்றால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிபர் பதவி வகித்த முதல் இளம் பெண் என்ற பெருமையையும் பெறுவார்.


காஷ்மீர் விவகாரம் குறித்து துளசி கபார்ட் தெரிவித்துள்ள கருத்து:


முதலில் சிக்கலான காஷ்மீர் வரலாறு குறித்து அறிய வேண்டும். அங்குள்ள மக்களுக்கு முன்னர் என்ன நடந்தது, இதனை முந்தைய அரசு எவ்வாறு கையாண்டது என்பது பற்றி புரிந்துகொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன்பு நான் காஷ்மீர் பெண்ணிடம் பேசும் போது, அவர்களுக்கு சொத்து வாங்க கூட உரிமை இல்லை என்பதை கேள்விப்பட்டேன். சொந்தத இடத்தில் இருந்தும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எத்தகையது. இது மனித உரிமை மீறலுடன் தொடர்புடையது. எப்படியோ அனைத்தும் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது என்று துளசி கபார்ட் கூறியுள்ளார்.


Next Story