மத்திய பிரதேசத்தில் மிக பெரிய திருப்பம்! சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி 3 எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க. அரசு அமைக்க ஆதரவு !
மத்திய பிரதேசத்தில் மிக பெரிய திருப்பம்! சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி 3 எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க. அரசு அமைக்க ஆதரவு !

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல் நாத் தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சி மீது கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 20 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். 20 எம்.எல்.ஏ. க்கள் ஒட்டுமொத்தமாக விலகியதால், காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா செய்தனர்.
இந்த நிலையில், 228 இடங்களை கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் 22 பேர் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரசின் பலம் 121ல் இருந்து 99 ஆக குறைந்துள்ளது.
அதே சமயம் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சமாஜ்வாடி எம்.எல்.ஏ க்கள் 2 பேர் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தரவுள்ளதாகவும், அவர்கள் நேற்று பா.ஜ.க. தலைவர் சவுகானை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளதாகவும் ஸ்வராஜ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
இது உண்மையாக இருக்குமானால், தற்போதுள்ள சூழ்நிலையில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க 102 உறுப்பினர்களே போதும். ஆனால் பா.ஜ.க. வுக்கு சொந்த பலமாக ஏற்கனவே 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜ.க. வில் இணைய உள்ள 25 அதிருப்தி உறுப்பினர்களையும் சேர்த்தால் பாஜக பலம் பேரவையில் 132 ஆக உயர்கிறது. எனவே அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைவது தெளிவாகிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.