#Hbd_இலவுகாத்தகிளி: பிறந்தநாளில் ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிஸின்கள், இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டில் முதலிடம்
#Hbd_இலவுகாத்தகிளி: பிறந்தநாளில் ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிஸின்கள், இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டில் முதலிடம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 67ஆவது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு, கட்சி தொண்டர்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துட்டார். தன்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் எனவும் அவர் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Hbd_இலவுகாத்தகிளி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என நினைப்பது ஆனால் அது நடக்காமல் தட்டிப்போவதையே இவ்வாறு குறிப்பிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று பல நாட்களாக காத்திருக்கிறார். அவர் தலைமையில் தி.மு.க. சந்தித்த அணைத்து தேர்தகளிலும் தோல்வி அடைந்தது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடைபெறும் அ.தி.மு.க வின் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சில வருடங்கள் முன்னாள் சபதம் எடுத்தார். அணைத்து கூட்டங்களிலும் ஆட்சியை 2 மாதத்தில் கவிழ்ப்பேன் என்று கூறுவார். ஆனால் மூன்று வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனால் #Hbd_இலவுகாத்தகிளி என்று நெட்டிஸின்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.