Begin typing your search above and press return to search.
"சுடலை பயமில்லாம சொல்லுற அந்த வசனம் என்ன?" : சன் டி.வி-யின் கேள்விக்கு ட்விட்டர் வாசிகள் அளித்த பதில்
"சுடலை பயமில்லாம சொல்லுற அந்த வசனம் என்ன?" : சன் டி.வி-யின் கேள்விக்கு ட்விட்டர் வாசிகள் அளித்த பதில்

By :
நேற்று இரவு 9.30 மணிக்கு சன் டி.வி-யில் ஸ்பைடர் திரைப்படம் ஒளிபரப்பானது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக சன் டி.வி-யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிடப்பட்டது. அதில், "சுடலை பயமில்லாமல் சொல்லுற அந்த வசனம் என்ன? ஸ்பைடர் தற்போது ஒளிபரப்பாகிறது", என்று பதிவிடப்பட்டது. ஸ்பைடர் படத்தில் கதாநாயகன் எஸ்.ஜி.சூர்யா-வின் கதாபாத்திர பெயர் சுடலை என்பது குறிப்பிடத்தக்கது.
சன் டி.வி-யின் இந்த கேள்விக்கு பலரும் "ஆக" என்றும், "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என்றும், "நான் கலைஞரின் மகன்" என்றும் பதிவிட்டு வந்தனர். இந்த பதில்களை கண்டதும் அந்த பதிவு நீக்கப்பட்டது.
ட்விட்டர் வாசிகள் ஏன் இது போன்ற பதில்களை அளித்தனர், அதன் பிறகு சன் டி.வி ஏன் அந்த ட்விட்டர் பதிவை நீக்கியது போன்றவை புரியாத புதிராகவே உள்ளது.
Next Story