Kathir News
Begin typing your search above and press return to search.

மரண பயம் போக்கும் நரசிம்மர் - பக்தருக்கு நலம் தர அவர் கொண்ட அவதாரம் எத்தனை தெரியுமா?

மரண பயம் போக்கும் நரசிம்மர் - பக்தருக்கு நலம் தர அவர் கொண்ட அவதாரம் எத்தனை தெரியுமா?

மரண பயம் போக்கும் நரசிம்மர் - பக்தருக்கு நலம் தர அவர் கொண்ட அவதாரம் எத்தனை தெரியுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 2:02 AM GMT

நலம் தரும் நரசிம்மர் வழிபாடு .

விஷ்ணுவின் அவதாரங்களிலேயே மிக உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம் . இமயவாத மலையில் நரசிம்மர் அவதரித்ததாக ஹரி வம்சம் கூறுகிறது . நரசிம்மருக்கு அவரின் தோற்றத்தையும் ஆயுதங்களையும் கொண்டு 74 வடிவங்கள் உள்ளதாக கூறப்படுகிறது . அதில் உக்ர நரசிம்மர் க்ரோத நரசிம்மர் வீர நரசிம்மர் விளம்ப நரசிம்மர் கோப நரசிம்மர் யோக நரசிம்மர் அகோர நரசிம்மர் அதர்சன நரசிம்மர் மற்றும் லஷ்மி நரசிம்மர் என முக்கியமாக 9 நரசிம்மர்கள் உண்டு

இதில் லஷ்மி நரசிம்மர் தவிர மற்ற நரசிம்மர்கள் பூசைக்கு பெரும்பாலும் பிரம்மசாரிகளே அனுமதிக்கபடுவார்கள் . லஷ்மி நரசிம்மர் மட்டும் கொஞ்சம் சாந்தமாக காட்சி அளிப்பார் . நரசிம்மர் பயத்தை போக்குபவர் . துஷ்ட சக்திகளின் பிடியிலிருந்து நம்மை உடனடியாக காப்பாற்றும் சக்தி நரசிம்மருக்கு உண்டு . இவரது மந்திரங்கள் தொடர்ந்து ஜெபித்தால் நமக்கு ஒரு கவசம் போல நம்மை சுற்றி பாதுகாக்கும் .

நரசிம்மர் எந்த அளவு கோபம் கொண்டவரோ அதே அளவு இரக்கம் கொண்டவராவார் . பக்திக்கு கட்டுப்பட்டவர் என்பதாலேயே பிரகலாதன் அழைத்தவுடன் வந்தார் . ஒரு செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுத்து நரசிம்மர் படத்திற்கு முன் மஞ்சள் உடை அல்லது வஸ்த்திரம் அணிந்து அமர்ந்து கொள்ள வேண்டும் முன்பு ஒரு நெய் விளக்கை ஏற்றி கொள்ள வேண்டும் .

உக்ரம் வீரம் மகா விஷ்ணுவெம் ஜ்வலந்தம் சர்வோ முக்தம் நரசிம்மம் பீஷனம் ம்ரித் யுர் ம்ரித்யும் நமாம்யஹம் . என்கிற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்வதால் எந்த திருஷ்டி இருந்தாலும் விலகும் . செவ்வரளி மற்றும் செம்பருத்தி மலர்களை நரசிம்மருக்கு அணிவிக்கலாம் அது அவருக்கு மிகவும் பிடிக்கும் . அவரை வழிபட வழிபட குடும்ப சண்டைகள் முடிவுக்கு வரும். நரசிம்மருக்கு விரதம் இருப்பவர்கள் பால் பொருட்களை கண்டிப்பாக தவிர்க வேண்டும்

வழக்குகளில் வெற்றி கிடைக்கும் எதிரி பயம் போகும் , எதிரிகளே நண்பர்கள் ஆவார்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் பிரகலாத சரித்திரத்தில் 7 ஆவது அத்யாயத்தில் 1 முதல் 10 அத்யாயங்கள் வரை பாராயாணம் செய்ய வேண்டும் . குறிப்பாக நரசிம்ம ஜெயந்தி அன்று இதை தொடர்ந்து செய்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன் கிடைக்கும் .

நரசிம்மரை ம்ரித்யுவே ஸ்வாகா என்று சொல்லி வழிபட்டால் மரண பயம் நீங்கும் , மேலும் இவர் அவதாரத்திற்கு மட்டும் அடித்தகை பிடித்த பெருமாள் என்ற பெயர் உண்டு . பக்தர்களை உரிமையோடு அடித்து அரவணைப்பவர் என்று பொருள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News