Kathir News
Begin typing your search above and press return to search.

மான்கறி வீடியோ வெளியிட்டு மதன் என்னை மானபங்கப்படுத்திவிட்டார் - தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான புகார்!

மான்கறி வீடியோ வெளியிட்டு மதன் என்னை மானபங்கப்படுத்திவிட்டார் - தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான புகார்!

மான்கறி வீடியோ வெளியிட்டு மதன் என்னை மானபங்கப்படுத்திவிட்டார் - தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான புகார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 9:20 AM GMT

கந்தசஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்தால், கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கும் திமுக வகையறா கட்சிகள், அதே கருத்து சுதந்திரத்தை வைத்து, திமுகவின் முகத்திரையை கிழித்துதொங்கவிட்டால், எங்கள் மானம் போச்சே! எங்க மருவாதி போச்சே! என்று அவதூறு வழக்கு தொடுப்பதை கண்கூடாக காண முடிகிறது.

அந்த வகையில் மான் கறி சாப்பிட்டதாக தன் மீது அவதூறு பரப்புகிறார் என்று, சேனல் விஷன் மதன் ரவிச்சந்திரன் மீது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் மதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி:

திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏவான இதயவர்மன், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கொடுக்கல் வான்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றிய காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், அதனை வைத்து மான்களை சுட்டதாக சர்ச்சை எழுந்தது.

அப்படி சுடப்பட்ட மான்களின் இறைச்சியை, திமுக மேலிடத்துக்கு அனுப்பி வைத்ததாக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இது குறித்த சில உண்மைகளை "சேனல் விஷன்" என்ற யூடியூப் சேனலில் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டிருந்தார். அதில் உதயநிதி ஸ்டாலின் பெயர் அடிபட்டதால், அந்த வீடியோவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அதில்,

"மதன் ரவிச்சந்திரன் என்பவர், தன்னுடைய "சேனல் விஷன்" யூடியூப் சேனலில், மான்கறி vs உதயநிதி ஸ்டாலின்/ திருப்போரூர் துப்பாக்கி சூடு என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டு, தனக்கும், தன்னுடைய குடும்பத்தின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்ப்படுத்திவிட்டார். என்னைப்பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டம், அவதூறு சட்டப் பிரிவின் கீழ் விசாரித்து, தண்டனை வழங்க வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தாங்கள் பேசினால் அது கருத்து சுதந்திரம், அதுவே மற்றவர்கள் தங்களைபற்றி பேசினால் அவர்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறி, நீதிமன்றத்தை நோக்கி ஓடும் திமுகவினர் செயல், அரசியல் வட்டாரத்தில் நகைப்பிற்குரிய செயலாக பார்க்கப்படுகிறது.


Next Story