Kathir News
Begin typing your search above and press return to search.

பிரிட்டன் பிரதமர் உடல்நிலை தேறுகிறது : சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சி.!

பிரிட்டன் பிரதமர் உடல்நிலை தேறுகிறது : சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சி.!

பிரிட்டன் பிரதமர் உடல்நிலை தேறுகிறது : சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதால் இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 10:48 AM GMT

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிக் ஜான்சன் சென்ற வாரம் திங்கள் கிழமை அவசர சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் அடைந்த அவரது உடல்நிலை மேலும் அபாயநிலைக்கு சென்றதால் நேற்று முன்தினம் இங்கிலாந்து மட்டுமல்லாமல் அனைத்து நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போரிக் ஜான்சனுக்காக கடவுளிடம் பிரார்த்திப்பதாக கூறினார். பிரதமர் மோடியும் இங்கிலாந்துக்கு போன் செய்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இங்கிலாந்து மக்கள் அவருக்காக பிரார்த்தினர்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் அவருக்கு மூச்சு விடும் சிரமங்கள் குறைந்துள்ளதாகவும், உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், தற்போது அவர் முந்தைய நினைவுகளுக்கு வந்துள்ளதாகவும் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனை தலைமை மருத்துவர் டொமினிக் ராப் கூறினார். மேலும் போரிக் ஜான்சன் நேற்று இரவு மிகவும் ஆபத்தானவர்களை கவனிக்கும் பிரிவில் உள்ள படுக்கையில் இருந்து சாதாரண தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,000 ஐ நெருங்கியதால், இன்னும் பல வாரங்கள் ஊரடங்கு முழு அளவில் அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வரும் திங்கள் கிழமை பிரிட்டிஷ் அமைச்சரவை கூடி நாட்டின் நெருக்கடிகள் குறித்து மீண்டும் விவாதிக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Source: https://news.totok.ai/news?lang=en&xurl=https://newsrsrc.totok.ai/prod/html/20200410/10000-20200410005504-1400266.html&d=10000-20200410005504-1400266

Next Story