Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்து என்ன சதி வேலையில் ஈடுபடப்போகிறதோ.? உலக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தகவல்களை திருடும் சீனா!

அடுத்து என்ன சதி வேலையில் ஈடுபடப்போகிறதோ.? உலக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தகவல்களை திருடும் சீனா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2020 7:20 AM GMT

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில், முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது உலக அளவில் மக்களிடையே புதுவித தெம்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், சீன அரசுடன் இணைந்து பணியாற்றும்,2ஹேக்கர்கள் உலக அளவில் கொரோனா வைரசுக்கான, தடுப்புசி தொடர்பான தகவல்களை திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குறிப்பிட்ட இரண்டு ஹேக்கர்கள் உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் வர்த்தக ரகசியங்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதே நபர்கள் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் தரவுகள் திருடப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story