Top
Kathir News
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க இந்தியர்கள் எதிர்ப்பு : வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மெளன அஞ்சலி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2019 8:22 PM GMT

நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகம் முன் குவிந்த நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள், கையில் இந்திய தேசியக்கொடி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவன் மசூத் ஆசாரை சர்வதேச கோர்ட்டில் பாக்., ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வட அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் நியூஜெர்சியில் அதிக அளவில் ஒன்று கூடி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். வுட்பிரிட்ஜ் பகுதியில் உள்ள ராயல் ஆல்பர்ட் பேலசில் புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

Next Story