சமூக நல்லிணக்கத்தை கெடுத்து அதன் வழியாக தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா எனக் துடிக்கிறார் ஸ்டாலின் - வானதி சீனிவாசன் அதிரடி!
சமூக நல்லிணக்கத்தை கெடுத்து அதன் வழியாக தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா எனக் துடிக்கிறார் ஸ்டாலின் - வானதி சீனிவாசன் அதிரடி!

கோவை நரசிங்கப்புறத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் குடியுரிமை சட்டம் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்று முதலமைச்சர் சொல்லியும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் விவாதம் செய்ய முன்வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று சமூக நல்லிணக்கத்தை கெடுத்து அதன் வழியாக தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா எனக் துடிக்கிறார், அதன் காரணத்தால்தான் சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் கேட்கிறார் இந்த சட்டம் பற்றிய விவாதம் செய்யுங்கள், இந்த சட்டத்தால் ஒரு முஸ்லிம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், நான் அதற்கு பதில் கொடுக்க தயாராக இருக்கிறேன் என முதலமைச்சர் சொல்லியும் கூட சட்டமன்றத்தில் விவாதம் நடத்த மாட்டேன் என்று சொல்கிறார், ஆக திட்டமிட்டு எதிர்க் கட்சிகள் தமிழகத்தை போராட்டக் களமாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் அதை இஸ்லாமிய அமைப்பும் அந்த சமுதாயத்தினரும் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.