Top
Kathir News
Begin typing your search above and press return to search.

களமிறங்கிய இந்திய இராணுவம் - குண்டுமழை பொழியும் விமானங்கள் : பயங்கரவாதிகளை கதிகலங்க செய்யும் 'வாயுசக்தி'.!

களமிறங்கிய இந்திய இராணுவம் - குண்டுமழை பொழியும் விமானங்கள் : பயங்கரவாதிகளை கதிகலங்க செய்யும் 'வாயுசக்தி'.!

களமிறங்கிய இந்திய இராணுவம் - குண்டுமழை பொழியும் விமானங்கள் : பயங்கரவாதிகளை கதிகலங்க செய்யும் வாயுசக்தி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Feb 2019 8:22 AM GMT


பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்திய விமானப்படை மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. பகலிரவு பாராமல் ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏவுகணைகள், குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டன.புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஒத்திகை குறித்து விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கு ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பொக்ரான் பகுதியில் "வாயு சக்தி' என்ற பெயரில் இந்திய விமானப்படை நேற்று மிகப் பெரிய ஒத்திகையை நடத்தியது.
விமானப் படையின் முழு பலத்தையும் காட்டும் வகையில், 140க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, 'தேஜஸ்' இலகுரக போர் விமானம், அதிநவீன ஹெலிகாப்டர்கள், தரையில் இருந்து ஆகாயத்தில் இலக்கை தாக்கக் கூடிய, 'ஆகாஷ் ஏவுகணை' உள்ளிட்டவை பங்கேற்றன. இதைத்தவிர மிக்-29 தாக்குதல் ரக விமானம், சுகோய்-30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21 பைசன், மிக்-27, ஐ.எல்.78, ஹெர்குலிஸ், ஏ.என்.32 போன்ற விமானங்களும் இந்த ஒத்திகையில் சிறப்பாக செயல்பட்டன. ஹெர்குலிஸ் போர் விமானம் குறுந்தொலைவு கொண்ட ஓடு தளத்தில் ஏறி இறங்கி வீரர்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்த்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.


இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஏராளமான வீரர்கள், கருடா கமாண்டோ படை மற்றும் போர் விமானிகள் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை செலுத்தியும் துல்லிய பயிற்சி மேற்கொண்டனர். மேலும் தாக்குதல் ரகத்தை சேர்ந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து குண்டு மழை பொழிந்து பொக்ரான் தரைப்பரப்பை அதிர வைத்தன.
https://www.hindustantimes.com/india-news/ever-prepared-to-deliver-response-says-air-chief-at-mega-exercise/story-gu2sdkcVoATtrHdYP0PfiO.html


Next Story