கொழும்பு குண்டு வெடிப்பு போல டெல்லியை கிடுகிடுக்க வைக்க மாபெரும் சதி திட்டம்!! பயங்கரவாத தம்பதியினர் கூறிய 'திடுக்' தகவல்கள்
கொழும்பு குண்டு வெடிப்பு போல டெல்லியை கிடுகிடுக்க வைக்க மாபெரும் சதி திட்டம்!! பயங்கரவாத தம்பதியினர் கூறிய 'திடுக்' தகவல்கள்

டெல்லியில் CAA வுக்கு எதிரான போராட்டம் வன்முறை மற்றும் கலவரமாக திரும்பியதில் கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ததில் டெல்லியில் பதுங்கி இருந்த, ஆப்கனை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத தம்பதியினர் சென்ற ஞாயிற்றுக் கிழமை பிடிபட்டனர். இவர்களின் பெயர் ஜகான்ஜேப் சமி, மற்றும் ஹீனா பஷீர் ஆகும்.
தங்களை இஸ்லாமிய கோரசன் தேசமான ஐ.எஸ்.கே.பி யை சேர்ந்த ஜிகாதிகள் என கூறிக்கொள்ளும் இவர்கள் முன்பு காஷ்மீரில் தலைமறைவாய் வாழ்ந்து வந்தனர். தற்போது அங்கு போலீஸ் மற்றும் இராணுவத்தின் பிடிகள் இறுகியதை அடுத்து தங்கள் முகாமை டெல்லிக்கு மாற்றியது தெரிய வந்துள்ளது.
டெல்லிக்கு வந்த இவர்கள் டெல்லியில் ஒரு மாபெரும் குண்டுவெடிப்பை நடத்த ஒரு சக்திவாய்ந்த இரசாயன ட்ரையசெட்டோன் ட்ரைபெராக்ஸைடு (டிஏடிபி) வாங்க திட்டமிட்டிருந்தனர். இந்த ரசாயனத்தை இஸ்லாமிய அரசின் பயங்கரவாதிகள் 'மரணத்தின் தாய்' என்று அழைக்கின்றனர்.
இவர்களின் நோக்கம் சென்ற ஆண்டு கொழும்பில் ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டு வைத்து 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதே போல இந்திய தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்பை நடத்துவது இவர்களின் நோக்கமாகும்.
இதற்காக இவர்கள் வெடிகுண்டு மற்றும் நவீன துப்பாக்கிகளை இயக்குவதில் தேர்ச்சி பெற்ற இஸ்லாமிய இளைஞர்களை உத்தர பிரதேசத்தில் தேடி வந்துள்ளதும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.
டெல்லியில் உரிய நேரம் பார்த்து தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும் CAA போராட்ட வன்முறைகளை அடுத்து டெல்லி இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் பழைய நகர் பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாதிகள் வேட்டையில் இவர்கள் சிக்கிக் கொண்டனர்.
மேலும் இந்த பயங்கரவாத தம்பதியினர் இஸ்லாமிய ஊடகங்களில் மிகவும் பிரபலமான காஷ்மிரோசின்ட் என்ற OSINT கணக்கை இயக்கி பயங்கரவாத செயல்களையும், காஷ்மீர் பிரிவினையையும் ஊக்குவித்து வந்ததாக டைம்ஸ் நவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.