ரஜினி மற்றும் கமலை கலாய்த்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன்!
ரஜினி மற்றும் கமலை கலாய்த்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன்!

ரஜினி மற்றும் கமல் இருவரும் இதுவரை நடிகர் சங்கத் தேர்தலில் கூட போட்டியிட்டதில்லை என்றும் இவர்கள் எப்படி சட்டமன்ற தேர்தலை தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலாய்த்து பேசியுள்ளார்.
சென்னை அடுத்த மணப்பாக்கத்தில் தேமுதிக விழாவில் கலந்து கொண்ட விஜயபிரபாகரன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒன்றாக நடித்தவர்கள். ஆனால் பெரிய அளவில் இணைந்து நடிக்கவில்லை. மேலும் இவர்கள் எப்படி தமிழக அரசியலில் இருவரும் இணைந்து செயல்படுவார்கள் அதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.
மேலும் ரஜினிகாந்த் இதுவரைஅரசியல் கட்சியை கூட ஆரம்பிக்கவில்லை.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகர்கள். ஆனால் அரசியலில் இல்லை. அரசியலில் நிற்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் அந்த தைரியம் இருவருக்கும் இல்லை.அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இப்போதும் மக்கள் மனதில் பெரிய அளவில் உள்ளார். அவர் வெளியில் வந்தால் தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்மே ஏற்படும்.
இவ்வாறு விஜயபிரபாகரன் கூறியுள்ளார் இந்த பேச்சு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.