தனிமைப்படுத்துவதற்காக சென்ற அதிகாரிகள், கலவரத்தில் ஈடுபட்ட சிறுபான்மையினர், பெங்களூருவில் பரபரப்பு!
தனிமைப்படுத்துவதற்காக சென்ற அதிகாரிகள், கலவரத்தில் ஈடுபட்ட சிறுபான்மையினர், பெங்களூருவில் பரபரப்பு!

பெங்களூருவில் உள்ள படரயணபுரத்தில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களின் மூலமாக 17 பேருக்கும் அந்த வைரஸ் பரவி உள்ளது. இதனால் கர்நாடக மாநில அரசாங்கம் ஏப்ரல் 9ஆம் தேதி அந்தப் பகுதியை முழுமையாக சீல் செய்து கட்டுப்பாடுகளை பலப்படுத்தியது.
டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய அந்தப் பகுதியைச் சேர்ந்த 68 பேர் இன்னும் தொடர்பு கொள்ளவும், அவர்களாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது, இந்நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்ட 17 பேரனிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பி.பி.எம்.பி அதிகாரிகள் போலீஸ் பாதுகாவலர்களுடன் அந்தப் பகுதிக்கு சென்று முதலில் 20 பேரை தனிமை படுத்தி உள்ளனர்.
மீதமுள்ள 38 பேரை தனிமைப்படுத்த அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் சென்றுள்ளனர் அப்போது அங்குள்ள சில சிறுபான்மையினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள், காவலரை தாக்கி அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள், பந்தல் மற்றும் வாகனங்களை சூறையாடி உள்ளனர் இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதிக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து 4 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு மாநகர போலீசார் தெரிவித்துள்ளார்.