உறுதியானது விஷால் - ஆனந்த் ஷங்கர் கூட்டணி.!
உறுதியானது விஷால் - ஆனந்த் ஷங்கர் கூட்டணி.!

தற்போது 'சக்ரா' மற்றும் 'துப்பறிவாளன் 2' படங்களில் நடித்து வரும் விஷால் அடுத்து இயக்குநர் ஆனந்த ஷங்கர் படத்தில் நடித்து வருவதற்கான பேச்சுவார்த்தை துவங்கியிருப்பதைப் பற்றி சில நாட்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இருமுகன் படத்தினை தொடர்ந்து திரைக்கதை விஷாலைச் சந்தித்து திரைக்கதையை விவாதித்தார் ஆனந்த் ஷங்கர். அவருக்குக் கதை பிடித்துப் போக, நாயகனாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் நடிக்க, இமான் இசையமைப்பதாக இருந்தது. படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதால் அதனைத் தயாரிக்கப் பலரும் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் பிற நடிகர்களை அணுகிக் கொண்டிருந்தார் ஆனந்த் ஷங்கர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் வினோத் குமாருக்குக் கதை பிடித்துப் போக, தானே இந்த படத்தினை தயாரிப்பதாகக் கூறியவர் விஷாலும், ஆர்யாவுமே இதில் நடிக்கட்டும் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து விஷால் - ஆனந்த் ஷங்கர் கூட்டணி உறுதியாகியுள்ளது.
விரைவில் இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.