Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷ்ணு விஷால்.!

அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷ்ணு விஷால்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2020 10:57 AM GMT

விஷ்ணு விஷால் நடித்துள்ள 'காடன்' மற்றும் 'ஜெகஜ்ஜால கில்லாடி' திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள நிலையில், எஃப்.ஐ.ஆர் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படம் படப்பிடிப்புக்கு தயாராக உள்ளதாகவும் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்நேரத்தில் அதன் அறிவிப்பை வெளியிடலாமா என தனது டிவிட்டர் பக்கத்தில் போல் ஒன்றை வெளியிட்டு கருத்துக் கேட்டிருந்தார் விஷ்ணு விஷால். பெரும்பாலானவர்கள் வெளியிடலாம் என்று கருத்து தெரிவிக்க, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பாக இருக்குமோ என்று ஆர்வத்துடன் எதிர்பாத்தனர். அதனைத் தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஷ்ணு விஷால்.

'மோகன் தாஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தினை விஷ்ணு விஷால் நடித்துத் தயாரிக்க, 'களவு' படத்தினை இயக்கிய முரளி கார்த்திக் இதனை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரிகின்றனர்.

இப்படத்தின் போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் தனது படத்தைத் தனது காதலியான ஜுவாலா கட்டா படம் பிடித்ததாகவும் அது நன்றாக இருந்ததால் அதைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளவர் இதன் மோஷன் போஸ்டரை கரோனா ஊரடங்கு அறிவித்ததற்கு முன்னரே தனது படக்குழுவினருடன் தனது அலுவலகத்திலேயே படப்பிடிப்பை நடத்தியதாகக் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News