Kathir News
Begin typing your search above and press return to search.

விவோ விளம்பரங்களில் அமீர் ‌‌‌மற்றும் சாரா அலி கான் தோன்ற மாட்டார்கள் - சீன எதிர்ப்பு மனநிலை காரணமா?

விவோ விளம்பரங்களில் அமீர் ‌‌‌மற்றும் சாரா அலி கான் தோன்ற மாட்டார்கள் - சீன எதிர்ப்பு மனநிலை காரணமா?

விவோ விளம்பரங்களில் அமீர் ‌‌‌மற்றும் சாரா அலி கான் தோன்ற மாட்டார்கள் - சீன எதிர்ப்பு மனநிலை காரணமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 3:16 AM GMT

பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் விவோ நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டு அதன் ஸ்மார்ட்போன் விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு ‌அவர்கள் விவோ நிறுவன விளம்பரங்களில் தோன்ற மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மக்களிடையே நிலவும் சீன எதிர்ப்பு மனநிலை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்திய-திபெத் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன வீரர்களுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் இந்த நிகழ்வுக்குப் பின்‌ தீவிரமடைந்துள்ளது. சில இடங்களில் ‌போராட்டங்களின் போது சீன நிறுவனங்களின் செல்ஃபோன்கள் கூட உடைக்கப்பட்டன.

இத்தகைய நிறுவனங்கள் தங்களது சீன தொடர்பை‌ மறைத்து 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்கள் என்று கூறி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற செய்தியும் வெளியானது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பும் கடந்த காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவு சரிவைச் சந்தித்துள்ளது. மேலும் பல தரப்புகளில் இருந்தும் பாலிவுட் பிரபலங்கள் ‌சீன தயாரிப்புகளை ஆதரித்து விளம்பரங்களில் தோன்றுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பாலிவுட் பிரபலங்கள் விளம்பரங்களில் தோன்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க விவோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. "ஐபிஎல் தொடருக்கு டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் விவோ நிறுவனம் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் இவற்றை ஆதரித்து அமீர் கான் மற்றும் சாரா அலி கான் விளம்பரங்களில் தோன்ற மாட்டார்கள்" என்று விஷயம் தெரிந்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

விவோ விளம்பரத் தூதராக கடந்த 2018ல் ஒப்பந்தம் செய்யப்பட்டு ட்விட்டரில் 26.3 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேரால் பின்தொடரப்படும் அமீர்கான் ஒரு நாள் விளம்பரப் படத்தில் நடிப்பதற்கு ₹ 4 கோடி என்ற வீதத்தில் வருடத்திற்கு ₹ 12- ₹ 15 கோடி சன்மானம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் விவோ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அமீர்கானின் புகைப்படம் இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது. மக்களின் சீன எதிர்ப்பு மனநிலை பாலிவுட் பிரபலங்கள் மீது திரும்பி விடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News