பூட்டியே கிடக்கும் தர்மபுரி தி.மு.க எம்.எல்.ஏ அலுவலகம்! ஏன் வாக்களித்தோம் என புலம்பும் மக்கள்!
பூட்டியே கிடக்கும் தர்மபுரி தி.மு.க எம்.எல்.ஏ அலுவலகம்! ஏன் வாக்களித்தோம் என புலம்பும் மக்கள்!

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியை தி.மு.க கைப்பற்றியது. தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தடங்கம் சுப்பிரமணி. இவர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதிலிருந்து பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்ட பாடில்லை. அப்படி அவரை பார்க்க சென்றாலும் தர்மபுரி நகரில் பழைய நீதிமன்றம் வளாகம் அருகில் அமைந்துள்ள எம்.எல்.ஏ அலுவலம் எப்போது பார்த்தாலும் பூட்டியே கிடக்கிறது என்று பொது மக்கள் புலம்புகின்றனர்.
தேர்தல் நடக்கும் முன்னர் உங்களுடன் இருப்பேன் உங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் உங்கள் வீட்டு பிள்ளையை போன்று ஓடோடி வருவேன் என்றெல்லாம் வாக்குறுதி அளித்து அப்பாவி மக்களிடம் வாக்கு வாங்கி எம்.எல்.ஏ-வாக ஆகி விடுகின்றனர். அதன் பின்னர் 5 வருடத்துக்கு அவர்களை பார்க்க முடிவதில்லை.
இந்நிலையில், தர்மபுரி தொகுதி மக்கள் "சட்டமன்ற தேர்தல் நடக்கும் முன்பாக பல்வேறு வாக்குறுதியை தடங்கம் சுப்பிரமணி அளித்தார். அதன் பின்னர் வெற்றி பெற்ற பின்னர் இதுவரை எந்த ஒரு கிராமத்திற்கும் நேரில் சென்று பார்த்ததில்லை. தி.மு.க-வை நம்பி ஏன் வாக்களித்தோம் என்று தெரியவில்லை என்று நாங்கள் புலம்பி கொண்டிருக்கிறோம்" என்று புலம்புகின்றனர்.
"இன்னும் ஓராண்டு முடிந்தால் 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரும். அப்போது திமுக எம்.எல்.ஏ எங்கள் கிராமத்திற்கு வந்து தான் ஆக வேண்டும் அப்போது நாங்கள் பேசிக் கொள்கிறோம்" என்று கொந்தளிக்கின்றனர் தர்மபுரி மக்கள்.
இன்னும் இருக்கின்ற ஒரு ஆண்டு காலத்திலாவது பொது மக்களுக்கு நல்லது செய்வாரா என்று தி.மு.க எம்.எல்.ஏ-வை பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.