Kathir News
Begin typing your search above and press return to search.

மஹாபாரத யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்னென்ன? யூகிக்கமுடியா ஆச்சர்யங்கள்.!

மஹாபாரத யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்னென்ன? யூகிக்கமுடியா ஆச்சர்யங்கள்.!

மஹாபாரத யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்னென்ன? யூகிக்கமுடியா ஆச்சர்யங்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2020 2:14 AM GMT

மஹாபாரத யுத்தத்தில் அதி அற்புதமான மற்றும் பயங்கரமான ஆயுதங்கள் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இரு தரப்பினராலும் பயன்படுத்தப்பட்டது. அதில் அஸ்திரங்கள் மிக முக்கியமானது. இவை சிறிய ரக ராக்கெட்டுகளை போல பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். கர்ணனின் நாகாஸ்திரம் மற்றும் கிருஷ்ணனின் சக்ராயுதம் இரண்டும் இலக்கை தாக்கிவிட்டு மீண்டும் எய்தவரிடமே சென்று விடும் தன்மை கொண்டவை. இது போன்ற அஸ்திரங்களை இன்னும் உலக நாடுகள் உருவாக்க முயற்சித்து கொண்டிருக்கின்றன. அதில் நாகாஸ்திரம் என்பது இலக்கை எந்த நிலையிலும் தவற விடாது. இது தற்காலத்திய வெப்பத்தை பின்பற்றி செல்லும் ராக்கெட்டுகளுக்கு இணையாக சொல்லலாம், போர்களில் விஷ வாயுக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன,

சம்மோஹன அஸ்திரம் எனப்படும் அஸ்திரம் மனித மனதையும் உடலையும் மயக்கமுற செய்யும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. "வாசவி சக்தி ஆயுதம்" என்பது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது இந்த ஆயுதம் பிரயோகிக்கப்படும் போது பிரமாண்டான மின்னலை போன்ற வெளிச்சம் ஏற்படும் இதை முதன் முதலில் இந்திரஜித் ல்ட்சுஷ்மணனுக்கு எத்திராக இராமாயணத்தில் உபயோகித்தான்.

மஹாபாரதத்தில் கர்ணன் கடோத்கஜனை கொல்ல பயன்படுத்தினான். கர்ணனின் விஜய தனுஷை பயன்படுத்தும் போது போர்க்களத்தில் வில்லின் நரம்புகள் எழுப்பும் சப்தம் பயங்கரமானதாக இருக்கும், இந்த தனுஷை சிவனின் உத்தரவில் விஸ்வகர்மா செய்திருக்கிறார், திரிபுரத்தை எரிக்க இதை சிவன் பயன்படுத்தி இருக்கிறார். நாராயணாஸ்திரம் ஏவப்பட்டால் அதிலிருந்த பல ஆயிரம் அஸ்திரங்கள் வெளிப்படும், இந்த அஸ்திரத்தை எதிர்க்க அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும், மஹாபாரதத்தில் இதை அஸ்வத்தாமன் பயன்படுத்தினான். பேரழிவை ஏற்படுத்தும் மூன்று ஆயுதங்களான பிரம்மாஸ்திரம், ப்ரமாண்டஅஸ்திரம் மற்றும் பாசுபதாஸ்திரம் ஆகியவையும் மஹாபாரதத்தில் பயன்படுத்தும் நிலைக்கு வந்து பிறகு தடுக்கப்பட்டது பிரம்மாஸ்திரம் மற்றும் ப்ரமாண்டஅஸ்திரம் என்பது தற்போதைய அணு குண்டு போன்ற ஆயுதம் இதில் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டால் அதை எதிர்ப்பதற்கு பிரமாண்ட அஸ்திரத்தை மட்டுமே ஏவ முடியும்.

முன்னதை பின்னது விழுங்கி விடும் அனால் பிரமாண்ட அஸ்திரம் ஏவப்பட்டால் அதை எந்த ஆயுதமும் எதிர்க்க முடியாது, மஹாபாரதத்தில் துரோணர் இதை ஏவ முற்பட்டு தடுக்கப்பட்டார், பாசுபதாஸ்திரம் அணு ஆயுதம் போன்றதே இதை அர்ஜுனன் சிவனிடம் இருந்து பெற்றான், மேலும் மஹேஸ்வராஸ்திரம் வருணாஸ்திரம் என்று இது போன்று எண்ணற்ற அஸ்திரங்கள் தற்காலத்திய ஆயுதங்களை விட ஆபத்தான ஆயுதங்கள் அன்று பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சர்யமான ஒன்று

Next Story