Kathir News
Begin typing your search above and press return to search.

WeChat செயலியை தடை செய்த ட்ரம்ப்! சில மணி நேரங்களில் சரிந்த பங்குச் சந்தை மதிப்பு!

WeChat செயலியை தடை செய்த ட்ரம்ப்! சில மணி நேரங்களில் சரிந்த பங்குச் சந்தை மதிப்பு!

WeChat செயலியை தடை செய்த ட்ரம்ப்! சில மணி நேரங்களில் சரிந்த பங்குச் சந்தை மதிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Aug 2020 8:37 AM GMT

அமெரிக்க அமைப்புகள் WeChat சமூக ஊடக செயலியை பயன்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை விதிக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டு சில மணி நேரங்களில் இரண்டு வருடங்களில் இல்லாத அளவு அதன் தாய் நிறுவனமான Tencent Holdingsன் பங்குச் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 6.8% வீழ்ச்சியடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. Tencent Holdings என்ற சீன நிறுவனத்தின் இந்த WeChat, ஒரு தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு பயன்படும் செயலியாகும்

ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள Tencent Holdingsன் பங்குகள் 10% என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்து பின்னர் 6.8% வீழ்ச்சியில் நிலை பெற்றன. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைக்கு முன்னர் இந்த நிறுவனம் ஃபேஸ்புக்குக்கு நிகரான மதிப்பு கொண்டிருந்ததாகவும் அது வரை உச்சகட்ட மதிப்பில் விற்பனை ஆகிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மற்றொரு சீன நிறுவனமான அலிபாபாவுக்கு அடுத்து முதலீட்டு மதிப்பு அதிகம் உள்ள நிறுவனம் Tencent Holdings என்றும் தெரிகிறது.

அமெரிக்காவில் சீன நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட செயலிகளின் பரவல் நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும், "டிக் டாக் போன்றே WeChat ஏகப்பட்ட தகவல்களை அதைப் பயன்படுத்தும்‌ அமெரிக்கர்களிடம் இருந்து திருடுவதால் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது" என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்கு வரும் சீனர்களின் தனிப்பட்ட தகவல்களையும் திரட்டுவதன் மூலம் WeChat சுதந்திரமான அமெரிக்க சமூகத்தில் அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது என்ற தகவலும் அந்த உத்தரவில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 6ம் தேதியில் இருந்து 45 நாட்களில் இந்தத் தடை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

WeChat செயலியை 3 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அதிபர் ட்ரம்பின் இந்த உத்தரவு அந்த நிறுவனத்தின் வீடியோ கேம் வணிகத்தை எந்த அளவு பாதிக்கும் என்று வல்லுநர்கள் கணித்து வருகின்றனர். பிற சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவு சரிவடைந்துள்ளன. சீன அரைமின் கடத்தி தயாரிப்பு நிறுவனம் Semiconductor Manufacturing Internationalன் பங்குகள் 9% மற்றும் அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் 6.4% என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்தன.


நன்றி : ஸ்வராஜ்யா


Image courtesy : Jurist

Next Story
கதிர் தொகுப்பு
Trending News