Kathir News
Begin typing your search above and press return to search.

வீடியோ கான்பரன்ஸில் பிரதமர் மோடி வேறு என்ன கூறினார்? புதுவை முதல்வர் கூறிய எக்ஸ்ட்ரா தகவல்!

வீடியோ கான்பரன்ஸில் பிரதமர் மோடி வேறு என்ன கூறினார்? புதுவை முதல்வர் கூறிய எக்ஸ்ட்ரா தகவல்!

வீடியோ கான்பரன்ஸில் பிரதமர் மோடி வேறு என்ன கூறினார்? புதுவை முதல்வர் கூறிய எக்ஸ்ட்ரா தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 1:10 PM GMT

ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பது பற்றி பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக இன்று மதியம் ஆலோசனை மேற்கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்: நான் வாரத்தில் ஏழு நாட்களும் மற்றும் 24 மணி நேரமும் பணியில் தான் உள்ளேன். இதனால் எந்த முதலமைச்சரும் எப்போது வேண்டுமென்றாலும் என்னை தொடர்புக் கொண்டு பேசலாம் மற்றும் கொரோன பற்றிய பரிந்துரைகளை வழங்கலாம் நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று கூறியதாக மட்டுமே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், பிரதமர் வேறு ஏதாவது கூறினாரா என செய்தியாளர்கள் புதுவை முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டனர். அதற்கு நாராயணசாமி பதில் கூறுகையில் "ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியே கொரோனாவில் இருந்து மக்கள் உயிரை காக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததுடன் நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான் அரசின் முதல் கடமை என்று பிரதமர் கூறினார். மேலும் வேளாண் பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும்" என்றும், பிரதமர் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.

Next Story