சூர்யாவின் சூரரை போற்று - தற்போதைய நிலை என்ன?
சூர்யாவின் சூரரை போற்று - தற்போதைய நிலை என்ன?

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரை போற்று'. இப்படம் முதலில் ஜனவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் CG காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதால் அந்த பணிகள் நிறைவடைய நேரம் தேவைப்பட்டதால் இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி அனைத்து படங்களி வெளியீடும் தள்ளி போயுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தற்போதைய நிலை குறித்து நாம் அறிய முற்பட்ட போது, படத்தின் CG காட்சிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் கொரோனாவை முன்னிட்டு CG பணிகளில் ஈடுபட்டிருந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் அனைவரும் தமது சொந்த ஊருக்கு சென்று விட்டதால், கொரோனா பிரச்சனைகளெல்லாம் முடிந்து அவர்கள் அனைவரும் திரும்ப வந்து இந்த பணிகளை முடித்து தந்த பின் தான் படம் வெளியீட்டிற்க்கு தயாராகும் என கூறுகின்றனர். இதனால் நிலைமை சரியடைந்தாலும் அதிலிருந்து குறைந்தபட்சம் 3 மாதமாவது கழித்து தான் சூரரை போற்று வெளியாகும் என்பதே தற்போதைய நிலை.