Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டில் தனிமைப்பட்டு உள்ளவர்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? தமிழக அரசின் புதிய வெளியீடு!

வீட்டில் தனிமைப்பட்டு உள்ளவர்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? தமிழக அரசின் புதிய வெளியீடு!

வீட்டில் தனிமைப்பட்டு உள்ளவர்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? தமிழக அரசின் புதிய வெளியீடு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 April 2020 1:18 PM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொற்று நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது கட்டத்தில்தான் தற்போது வரை இருக்கிறது. 2வது நிலையிலேயே கட்டுப்படுத்துவதற்குதான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக முதல்வர் எடப்பாடி கூறினார். இந்த நிலையில் வீட்டில் தனிமைப்பட்டு உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை நேற்று நடைபெற்ற உயர்நிலை கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு;

தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறையை ஒதுக்க வேண்டும்.

· தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

· தனிமைப்படுத்தப்பட்டவர் வெளியே எங்கும் செல்லாமல் ஒதுக்கப்பட்ட அறையிலேயே இருக்க வேண்டும்.

· பராமரிப்பு பணி செய்வர் தவறாமல் முகக்சவசமும் கையுறையும் அணிந்திருக்க வேண்டும்.

· தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

· தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், விரிப்புகளை தனியாக துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.

· முகக்கவசம், கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

· முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் யாரும் தனிமைப்படுத்தப்பட்டவருடன் தொடர்பில் இருக்க கூடாது.

· தனிமைப்படுத்தப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

வீட்டை தினமும் 3 முறையாவது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

· தனிமைப்படுத்தப்பட்டவருக்கு சளி, காய்ச்சல் இருந்தால் 104 அல்லது 1800 120 555550-ஐ தொடர்பு கொள்ளலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News