கடுமையான உழைப்பால் என்ன பயன் என சிந்திப்பவரா நீங்கள்? அப்ப அவசியம் படிங்க.!
கடுமையான உழைப்பால் என்ன பயன் என சிந்திப்பவரா நீங்கள்? அப்ப அவசியம் படிங்க.!

வேலை – வாழ்க்கை இரண்டுக்கும் இடையேயான சமநிலை என்ற வாசகத்தில் இருக்கும் சிக்கலே வேலை என்பது தவறானதை போலவும், வாழ்க்கை என்பது மட்டுமே சரியானது என்பதை போன்ற பிம்பம் இன்றைய உலகில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு இருக்ககூடிய சமூக ஊடகங்களில், மீம்ஸ் போன்ற நகைச்சுவையான பகிர்வாக வரக்கூடிய படங்களும், கருத்துருவாக்கமும் ஆழமாக முன்வைக்க கூடிய செய்தி. வெள்ளிக்கிழமை போன்ற வார இறுதிகள் விடுதலையின் அடையாளமாக, உற்சாகத்தின் குறியீடாக சுருங்க சொன்னால், வார இறுதிகள் ஒரு வரம் போலவும், வேலை துவங்கிற திங்கட்கிழமைகள் ஒரு சாபம் போலவும் காட்சிப்படுத்தப்படுகிறது.
இன்றைய இளைஞர்கள் அனைவரும் ஒரே தேவைக்காக ஓடுகிறார்கள். பேர், புகழ், பொருளாதாரம், அங்கீகாரம், ஆரோக்கியம் என பலவகைப்பட்ட தளங்களில் ஓடுகிறார்கள். இவர்களுக்கென பல முன்மாதிரி சாதனையாளர்களும் உண்டு.
சச்சின், ஸ்டீவ் ஜாப்ஸ் என நீளும் பட்டியலில் பல தொழில் முனைவோர், அத்துரை சார்ந்த ஆதர்ஷங்கள் என ஏராளமானோர் உண்டு. இவர்களின் சாதனைகளும், வேலை இயல்பும், வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் இன்றைய இளைஞர்களின் முன்மாதிரிகள் அனைவரிடத்திலும் ஒத்திசைவோடு ஒருங்கே இருக்கும் பண்பு "கடினமான உழைப்பு"
"வெற்றியாளர்கள் அனைவரிடமும் அவர்களின் தொழில் இயல்பு, ரிஸ்க் எடுக்கும் தன்மை, படிப்பு, இலக்கின் மீதான பார்வை என அனைத்து தளங்களும் வேறுபட்டாலும் இந்த அனைவரிடத்திலும் ஒரே சீரான அளவில் அழுத்தமாக இருந்தது தாம் செய்யும் செயல் மீது அவர்களுக்கு இருந்த "தீவிரமான ஆர்வம்" (Intense passion)"
சச்சின் என்கிற மாபெரும் வீரர், தன்னுடய கடைசி போட்டிக்கு பின்னான உரையில் பேசுகிறார், "நல்ல கிரிக்கெட் விளையாடுவதென்பது எனக்கு ரன்களின் மீது இருந்த தீவிரமான பசி அதுவே அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது" என பேசுகிறார். இதில் குறிப்பிடப்படவேண்டிய அம்சம் அது அவருடைய கடைசி போட்டி ஆனால் அந்த ஒரு போட்டியை விளையாட 22,000 பந்துகளை பயிற்சி செய்து பின் களம் புகுகிறார்.
மாபெரும் வெற்றியை ஈட்டிய பின், இந்த போட்டிக்கு பின் இனி எந்த போட்டியும் இல்லை என்ற உணர்வுக்கு பின் இந்த பயிற்சி, இந்த கடும் உழைப்பு தேவையா? என்ற எண்ணம் அவருள் எழவே இல்லை. அது தேவை என்பது தின்னமாக நம்பினார்.
அந்த நம்பிக்கையும், அந்த கடும் உழைப்பிற்கான தேவையை உணர்தலுமே கடும் உழைப்பு என்பதை அழுத்தமற்ற ஆனந்தமற்ற ஓர் நிகழ்வாக நம்முள் மலர்த்தும்.6