Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீரில் அடுத்த அதிரடி என்ன? - அமித்ஷா அவசர ஆலோசனை!!

காஷ்மீரில் அடுத்த அதிரடி என்ன? - அமித்ஷா அவசர ஆலோசனை!!

காஷ்மீரில் அடுத்த அதிரடி என்ன? - அமித்ஷா அவசர ஆலோசனை!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2019 10:04 AM GMT


கடந்த இரு வாரங்களாக காஷ்மீர் மாநிலத்தில் கடும் பீதி நிலவுகிறது. ஏற்கனவே, அங்கு ஆயிரக்கணக்கான துணை ராணுவத்தினர், பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கூடுதலாக 45 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பி உள்ளனர்.
காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரை பயணிகள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரை, உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறும்படி அம்மாநிலஅரசு உத்தரவிட்டுள்ளது. மச்சாயில் மாதா புனித யாத்திரையும் ரத்து செய்யப்பட்டது.



இதேபோல காஷ்மீரில் படித்துவரும் மாணவர்களையும், காஷ்மீரி அல்லாத மக்களையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
காஷ்மீரில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலவர தடுப்பு அதிரடிப் படைகளும் காஷ்மீருக்கு விரைந்து உள்ளன. மத்திய பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடி படை வீரர்கள்,கலவர தடுப்புகளில் திறமை வாய்ந்தவர்கள்.
ராணுவ கட்டுப்பாட்டில் காஷ்மீர் மாநிலம் கொண்டுவரப்பட்டுள்ளது. காஷ்மீருக்குள் நுழையும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.அதேபோல, காஷ்மீருக்குள் இருந்து வெளியேறும் சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீருக்கு வெளியில் இருந்து காஷ்மீர் மாநிலத்தை சாராதவர்களை அனுமதிப்பதில்லை.
எந்த நேரத்திலும் காஷ்மீர் மாநிலம் முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, காஷ்மீர்மாநிலத்தில் பதட்டம் அதிகமாகியுள்ளது.
மொத்தத்தில் காஷ்மீர் மாநிலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் வந்ததுள்ளது.


இதற்கிடையே, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.


சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பாகிஸ்தான் ஊட்டி வளர்த்த பயங்கரவாதிகள் உடலை வெள்ளை கொடி காட்டியபடி வந்து அள்ளி செல்லுமாறு நமது ராணுவம் அறிவித்துள்ளது.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் காஷ்மீர் நிலவரம்குறித்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கியஅதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து அமித்ஷா கேட்டறிந்தார். பின்னர் காஷ்மீரில் அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


எனவே அமித்ஷாவின் அடுத்த அதிரடியை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News