மாத வருமானம் பெறும் அனைத்து ஊழியர்களும் 18 சதவிகிதத்தை டெபாசிட் செய்யவேண்டுமா? போலி செய்திகளைத் தகர்த்தது, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் PIB Fact Check!
மாத வருமானம் பெறும் அனைத்து ஊழியர்களும் 18 சதவிகிதத்தை டெபாசிட் செய்யவேண்டுமா? போலி செய்திகளைத் தகர்த்தது, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் PIB Fact Check!

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதைக் குறைப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்று பத்திரிகை தகவல் அலுவலகத்தின் PIB Fact Check பிரிவு ட்வீட் மூலம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு, ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 50 ஆகக் குறைக்கவுள்ளது என்று இணையதள பக்கம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த செய்திக்குப் பதிலடியாக இந்த ட்வீட் பதிவிடப்பட்டது.
மாத வருமானம் பெறும் அனைத்து ஊழியர்களும் 18 சதவிகிதத்தை டெபாசிட் செய்யவேண்டும் என்பதற்கான சட்டம் ஒன்றை, அரசு கொண்டு வரவிருப்பதாக வாட்ஸ்அப் மூலம் பரப்பப்படும் போலி செய்தியையும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் PIB Fact Check பிரிவு வெளியிட்ட மற்றொரு ட்வீட் தகர்த்துள்ளது அதற்கான இணைப்பு.
கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில், போதுமான கட்டமைப்பு வசதியும், கருவிகளும் டமெங்கிலாங் என்னுமிடத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், இல்லை என்று மணிப்பூரில் வெளியான செய்தியொன்றை அஸ்ஸாம் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் வாயிலாக PIB Fact Check, மேற்கொண்ட ஃபேக்ட் செக் மூலம் தெரிய வந்தது. முன்னதாக, மாநில சுகாதாரத் துறையும், இந்த செய்தியில் உள்ள விவரங்களுக்கு மறுப்பு வெளியிட்டு இருந்தது. இணைப்பு