இக்கட்டான சுழலில் திறன்பட ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எங்கே? இந்நேரத்திலும் அரசியல் இலாபம் பார்க்க துடிக்கும் தர்மபுரி MP செந்தில்குமார் எங்கே? குமுறும் வலைத்தளவாசிகள்!
இக்கட்டான சுழலில் திறன்பட ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எங்கே? இந்நேரத்திலும் அரசியல் இலாபம் பார்க்க துடிக்கும் தர்மபுரி MP செந்தில்குமார் எங்கே? குமுறும் வலைத்தளவாசிகள்!

மக்கள் நலனை முக்கியமாக கொண்டு அரசியல் சார்பற்று பல கட்சிகளை சார்ந்தவர்களும் கருத்து வேறுபாடுகளை கடந்து அவர்களால் முடிந்த செயல்களை செய்து வருகின்றனர். மேலும் மத்திய, மாநில சுகாதாரத்துறை, பேரிடர் மீட்பு துறை, காவல் துறை என பல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் பணி செய்து வரும் இவ்வேளையில் தருமபுரி MP திரு. செந்தில்குமார் அவர்கள் சுகாதாரத்துறையை குறை சொல்லி அரசியல் லாபம் தேடுவதை பலரும் இணையத்தில் கண்டித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி பல்வேறு நாடுகள் முடங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாண்டவம் அரங்கேறி வருகிறது. இதனை தொடர்ந்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தார், மேலும் மத்திய & மாநில அரசுகள் இந்த ஊரடங்கால் எளிய மக்கள் யாரும் பாதிப்படைய கூடாது என்ற நோக்கத்தில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
முழு அடைப்பே சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் என்று ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தவர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள். இடையில் மாண்புமிகு நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஒரு மருத்துவர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர், ஆதலால் இந்த இக்கட்டான சுழலில் எப்படி செயல்படலாம் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தன் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் மாநிலங்களவை உறுப்பினரான அவர் தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ.3 கோடியை தமிழக அரசிற்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக வழங்கி உள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து தர்மபுரியில் போட்டியிட்டு வென்றவர் தான் திரு.செந்தில்குமார், இவரும் ஒரு மருத்துவர்தான், ஆனால் இவர் பெரும்பாலும் சமுக வலைதளங்களில் மற்றவர்களை குறை சொல்லி கொண்டிருப்பதையும், கேலி செய்து கொண்டிருப்பதையும் தன்னுடைய தொடர் பணியாக செய்து வருகிறார். தற்போது கூட சுகாதாரத் துறையை குறை சொல்லியிருக்கிறார். இந்த செய்தி சமுக ஊடகங்களில் பரவ தொடங்கியது, அதுமுதல் பலரும் இவரின் இந்த பொறுப்பற்ற சுயநல போக்கினை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பு திரு.தயாநிதிமாறன் அவர்களும் இது போன்று அரசை குறை சொல்லி டிவீட் செய்ய அதனை பலரும் விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சுழல்களில் கட்சி, அரசியல், மதம், இனம் என அனைத்தையும் தாண்டி உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு கொண்டிருக்கும் போது ஏசி அறைகளில் அமர்ந்துகொண்டு, இரவு பகல் பாராமல் பணி செய்து கொண்டிருப்பவர்களை விமர்சனம் என்ற பெயரில் குறை சொல்லி சுயலாபம் பார்க்க நினைப்பவர்களை என்ன சொல்வது என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் நொந்து கொள்கின்றனர்.
இக்கட்டான சூழ்நிலைகளில் உறுதுணையாக இல்லா விட்டாலும் கூட பரவாயில்லை, ஆனால் இப்படி குறை சொல்லியே பிழைப்பு நடத்த வேண்டிய சுழலில்தான் தி.மு.க-வினர் உள்ளனரா? இவர்களை எல்லாம் கண்டிக்க ஆளே கிடையாதா? அரசின் நடவடிக்கைகளுக்கு முதலில் வந்து ஆதரவுளிக்கும் ஸ்டாலின் பிறகு தன்னுடைய கட்சியினரை கொண்டு இப்படி அரசியல் செய்கிறாரா? என்ற கேள்விகளை வலைத் தளங்களில் மக்கள் எழுப்பி விவாதித்து வருகின்றனர்.