Kathir News
Begin typing your search above and press return to search.

வேண்டுமென்றே பாதுகாப்பு உடைகளை பதுக்கிய சீனா - திட்டமிட்டே அரங்கேறிய விலையேற்ற நாடகம் : சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய அமெரிக்கா!

வேண்டுமென்றே பாதுகாப்பு உடைகளை பதுக்கிய சீனா - திட்டமிட்டே அரங்கேறிய விலையேற்ற நாடகம் : சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய அமெரிக்கா!

வேண்டுமென்றே பாதுகாப்பு உடைகளை பதுக்கிய சீனா - திட்டமிட்டே அரங்கேறிய விலையேற்ற நாடகம் : சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய அமெரிக்கா!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 April 2020 6:28 PM IST

திங்களன்று, அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி பீட்டர் நவரோ, ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸிடம் பேசுகையில், சீனா பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ), கொரோனா தாக்கத்திற்கு பிறகு அதிக விலைக்கு விற்கிறது என்பதற்கான ஆதாரங்கள் அமெரிக்காவிடம் உள்ளன என்று கூறினார். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவற்றை பதுக்கி வைத்திருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. "அவர்கள் 18 மடங்கு அதிகமான முகமூடிகளை வாங்கினார்கள். கண்ணாடி மற்றும் கையுறைகள் இரண்டிற்கும் அதிக செலவுகளை அதிகரித்தனர ", என்று அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து நியாயமான விசாரணைக்கு அழைப்பு விடுத்த நவரோ, சீனாவின் நடத்தை சர்வதேச ஒழுங்கிற்கு ஏற்ப இல்லை என்று கூறினார். பாதுகாப்பு உபகரணங்களின் போதிய சப்ளை இல்லாததால் அமெரிக்கா அதன் உற்பத்தியை தானே தயாரிக்கும் நிலைக்கு முடுக்கி விட்டுள்ளது.

ஏற்கனவே குறைபாடுள்ள முகமூடிகளை விற்ற குற்றச்சாட்டுக்கு ஆளானது சீனா. பின்னர், ஐரோப்பிய நாடு முதலில் மனிதாபிமான சைகையாக நன்கொடை அளித்த பாதுகாப்பு உபகரணங்களை, இத்தாலிக்கு விற்றதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு உபகரணங்களை பதுக்கியதாக கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் சீனா மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News