சனி கொடுத்தால் யார் தடுப்பார்? எனில் சனீஸ்வரன் என்பவர் யார்?
சனி கொடுத்தால் யார் தடுப்பார்? எனில் சனீஸ்வரன் என்பவர் யார்?

இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அறிவியலின் படி, சனி கிரகத்தை சனீஸ்வரன் என்று அழைத்து வழிபடுவது வழக்கம். இந்த சனீஸ்வின் கர்ம காரகன் அதாவது மனிதனின் கர்ம வினைகளுக்கேற்ற பலனை தவறாமல் தருகிறவர் . நல்ல தீய செயல்களுக்கு ஏற்ற வாறு ஆதிஷ்டத்தையும் தண்டனைகளையும் தருவார் சனி தடுத்தால் எவர் கொடுப்பார் சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி உண்டு. சனி பலமிழந்து இருப்பவர்கள் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும் . தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் சனீஸ்வர பகவானின் சூட்சம உருவமான காகத்திற்கு உணவிட வேண்டும் . இதை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்ய வேண்டும் . சனி நீதியின் தலைவன் தர்ம நியாயங்களுக்கு முன்னுரிமை தருபவன் . பாரபட்சம் இல்லாதவன் . அதனால் பாரபட்சமற்று நீதியின் பக்கம் நிற்பவர்களுக்கு சனியின் ஆசி என்றும் உண்டு...
சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களையும் விட நகர்வதில் மிக மந்தமாக இருப்பதால் சனீஸ்வரனுக்கு மந்தன் என்ற பெயர் உண்டு . வழுவழுப்பான பொருட்கள் எண்ணை வகைகள் இரும்பு போன்றவற்றில் சனியின் ஆதிக்கம் உண்டு...
சனீஸ்வரனால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த தெய்வம் ஆஞ்சநேயர் . பொதுவாக சனியிடம் இருந்து யாரும் தப்ப முடியாது தேவாதி தேவர்களும் தெய்வங்களும் சனியின் பார்வை படாமல் தப்ப இயலாது . அதற்கு விதி விலக்காக இருந்தது ஆஞ்சநேயரும் விநாயகரும்தான் .. விநாயகர் கூட சனியிடம் இருந்து தப்பிக்க மட்டுமே செய்தார்... ஆனால் ஆஞ்சநேயர் சனியையே சோதித்து தன் பக்தர்களுக்கு துன்பம் தரக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு விடுவித்தார் .. சனிக்கிழமை அனுமன் வழிபாடு . அனுமன் சாலீஸா படித்தல் . அனுமனுக்கு சனி அன்று வெற்றிலை மாலை அணிவிப்பது . ராம சரிதம் சொல்லும் ராமயணம் படிப்பது போன்றவை சனியின் பாதிப்பை குறைக்கும் என்பது பலரின் அனுபவ பூர்வமான உண்மை
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹே தன்னோ மந்த பிரஜோதயாத் என்னும் சனீஸ்வர காயத்ரியை 108 முறை தினந்தோறும் ஜெபித்து .. மராட்டிய மாநிலத்தில் சனி பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனி சிக்னாபூர் என்கிற இடத்திற்கு ஒரு முறை சென்று வந்தால் சனியின் தீய ஆதிக்கம் குறைந்து நன்மை தரக்கூடிய ஆற்றல்கள் அதிகம் கிடைக்கும் . தமிழகத்தில் உள்ள நள மகாராஜா வெட்டிய நளன் குளம் உள்ள திருநள்ளாருக்கும் திருப்பதிக்கும் வருடம் ஒரு முறை சென்று வருவதும் சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சிறந்த பரிகாரமாகும்