21 நாட்கள் ஊரடங்கு ஏன்? விளக்கம் அளிக்கும் அமைச்சர்..
21 நாட்கள் ஊரடங்கு ஏன்? விளக்கம் அளிக்கும் அமைச்சர்..

21 நாட்கள் ஊரடங்கு ஏன்? சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 21 நாட்கள் என்பது?நிபுணர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸின் இங்குபேஷன் காலம் 14 நாட்கள் என தெரிவித்துள்ளனர், இடையில் யாருக்காவது நோய்த் தொற்று ஏற்பட்டால் அதற்கு ஏழு நாட்கள், ஆக 21 நாட்கள்! இந்த நாட்கள் முழுவதும் சமூகத்தோடு நெருக்கமாக இல்லாமல், தனிமைப் படுத்திக் கொண்டால் நிச்சயம் இந்த நோய் தொற்றை தவிர்க்க முடியும் என கூறினார்.
நாட்டுக்காக, மக்களுக்காக, நமக்காக 21 நாட்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன், இது அரசாங்க உத்தரவு மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அதிகாரத்தோடு சொன்னாலும் கூட அன்போடு வேண்டிக் கொள்வது, 21 நாட்கள் வேள்வியாக இருந்து தனிமைப் படுத்திக் கொண்டால் மிகப்பெரிய பேராபத்தில் இருந்து நம்மை, நம் குடும்பத்தாரை, இந்த சமூகத்தை காக்க முடியும், அதன் மூலம் இந்தியாவில் நோய் பரவலைத் தடுக்க முடியும் என பேசியுள்ளார்.