Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து கலாச்சாரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வது ஏன்?

இந்து கலாச்சாரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வது ஏன்?

இந்து கலாச்சாரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்வது ஏன்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 2:16 AM GMT

ஹிந்துக்களின் விரத முறைகள் என்பது மிக வித்தியாசமானது. அவரவர் விரதமிருக்கும் தெய்வங்களுக்கு ஏற்ப இந்த விரத முறைகள் மாறுபடும். பெரும்பாலான ஹிந்துக்கள் உணவு முறைகளில் தேர்வு செய்த உணவை மட்டுமே விரதத்தின் போது உண்ணுவார்கள், சிலர் நீர் ஆகாரங்களை மட்டும் உண்ணுவார்கள், சிலர் குறிப்பிட்ட சில உணவு பொருட்களை உதாரணமாக பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். விரதங்களுக்கென்று பிரத்யேக நாட்களும் கிழமைகளுக்கு கூட உள்ளது. குறிப்பாக ஏகாதசி விரதம் என்பது மிக பிரபலமானது. ஏகாதசி என்பது அம்மாவாசை மற்றும் பௌர்ணமியை தொடர்ந்து வரும் 11 ஆம் நாள். இன்னொரு முக்கியமான நாள் என்பது பௌர்ணமியை தொடர்ந்த 4 ஆம் நாளான சங்கடஹர சதுர்த்தி. இந்த நாட்களில் விரதமிருப்பது உடல் மற்றும் மன அளவில் பெரிய நன்மையை ஏற்படுத்தும்.

சைவ பிரிவை சேர்ந்த ஹிந்துக்கள் பிரதோஷம், சிவராத்திரி மற்றும், சஷ்டி அன்று விரதத்தை கடைபிடிப்பார்கள். நவராத்திரி போன்ற நாட்களின் விரத விரதமிருப்பவர்கள் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேல் பால் மற்றும் தண்ணீரை மட்டும் உட்கொண்டு விரதமிருப்பார்கள். அய்யப்ப பக்தர்கள் 40 நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எளிமையான உணவு மட்டுமே உட்கொள்வார்கள். இந்த நாற்பது நாள் விரதம் என்பது மிகப்பெரிய மாற்றத்தை பக்தர்களுக்கு ஏற்படுத்தும். வாரம் ஒரு நாள் வயிற்றை காலியாக வைப்பது நம் உடலை சுத்தப்படுத்தும், மேலும் விரதம் இருந்த மறுநாள் வயிற்றில் சுரந்த ஜீரண அமிலங்களின் வீரியத்தை குறைக்க அகத்தி கீரை உண்பது வழக்கமாக இருந்தது.

காஞ்சி மகாபெரியவர் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவை தானம் செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். ஏகாதசி மற்றும் சதுர்த்தி விரதங்களை போல் இன்னொரு முக்கியமான விரத முறை சந்திராயண விரதமாகும். பௌர்ணமியில் ஆரம்பித்து அம்மாவாசை வரை உணவை குறைத்து கொன்டே வருவார்கள் பிறகு அம்மாவாசை தொடங்கி அடுத்த பௌர்ணமி வரை படிப்படியாக உணவை அதிகரித்து கொண்டே வருவார்கள். விரதங்களால் ஏற்படும் நன்மைகளை குறித்து இன்றைக்கு ஆராய்ச்சிகள் வெளி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News