Kathir News
Begin typing your search above and press return to search.

அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்? ராமாயணம் சொல்லும் ஆச்சர்யம்.!

அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்? ராமாயணம் சொல்லும் ஆச்சர்யம்.!

அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்? ராமாயணம் சொல்லும் ஆச்சர்யம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 July 2020 1:46 AM GMT

வெற்றிலை நமது வீடுகளில் சுப நிகழிச்சிகளில் தவறாமல் பயன்படுத்தப்படுவது. வெற்றிலை அதீத ஆகர்ஷண சக்தி வாய்ந்த ஒரு இலையாகும். அனுமன் சீதையை இலங்கையில் கண்டு விடைபெற்று சென்றபோது சீதை இந்த வெற்றிலையால் அனுமனை ஆசீர்வதித்தாக ராமாயணம் கூறுகிறது. இந்த இலை வெற்றியை குறிக்கிறது.

கோயில்களைக் குறிப்பாக அனுமன் கோவில்களில் வெற்றிலை மாலை சாற்றப்படுகிறது. நினைத்த காரியம் வெற்றி பெறுவதற்கு வெற்றிலை மாலை சமர்ப்பிப்பது என்பது ஒரு மரபாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறதுக்கு. இந்த வெற்றிலை ஆனது நாம் வேண்டியதை கிரகிக்கும் ஆற்றல் பெற்றது. இந்த வெற்றிலையோடு சில பொருட்களை சேர்த்து குறிப்பிட்ட கிழமைகளில் வழிபாடு செய்தால் அந்ததந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இந்த வெற்றிலையை வைத்துக்கொண்டு 12 ராசிக்காரர்களும் தங்களுக்கேற்ற பரிகாரங்களை செய்து கொள்ளலாம்.

ரிஷபம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை வெற்றிலையில் மாம்பழம் வைத்து முருகனை வழிபட வேண்டும் . ரிஷபம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிபட வேண்டும் மிதுனம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன் அன்று இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும் கடக ராசி காரர்கள் வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளியை வழிபட வேண்டும்

சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபடடலாம் கன்னி ராசிக்காரர்கள் வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும் துலாம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும் விருச்சகம் ராசிக்காரர்கள் வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செய்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும் தனுசு ராசி காரர்கள் வியாழக்கிழமை வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும்.

மகர ராசி காரர்கள் சனிக்கிழமை வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து காளியை வழிபட வேண்டும் கும்ப ராசிக்காரர்கள் வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளியை வழிபட வேண்டும் மீனா ராசிக்காரர்கள் வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News