பிரபல பாடகி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.க எம்.பிக்கு கொரோனா பாதிப்பா? பாடகி மீது வழக்கு!
பிரபல பாடகி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.க எம்.பிக்கு கொரோனா பாதிப்பா? பாடகி மீது வழக்கு!

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள வைரஸ் பாதிப்பால் இதுவரை 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாடகி கனிகா கபூரின் இசை நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.இதில் இந்தியாவை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகனுமான பா.ஜ.க எ.பி துஷ்யந்த் சிங் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில், கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க எம்.பி துஷ்யந்த் சிங் தன்னை தனிமை படுத்தி கொண்டுள்ளார். இதை அடுத்து கொரோனா வைரஸை பரப்பியதாக கன்னிகா கபூர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.