Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கு உத்தரவு நீடிப்பது பற்றி ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவு எடுக்கப்படுமா?

ஊரடங்கு உத்தரவு நீடிப்பது பற்றி ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவு எடுக்கப்படுமா?

ஊரடங்கு உத்தரவு நீடிப்பது பற்றி ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவு எடுக்கப்படுமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 1:07 PM GMT

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வருகிறது. இதனால் இதுவரை 80ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி 5ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது உத்தரவு அமலில் உள்ளது.

இந்த உத்தரவை மேலும் அதிகரிக்க பல அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.கொரோனா வைரஸ் நடவடிக்கை பற்றி இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் பல அரசியல் கட்சி தலைவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர்.

மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவை உடனடியாக நிறுத்துவது பற்றி முடிவு இல்லை என மோடி தெரிவித்தாகவும். ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு தொடர்வது முக்கியம் என மோடி தெரிவித்தாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடல் நடத்த உள்ளார். இந்த கலந்துரையாடலில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது பற்றி பேசப்பட உள்ளது மற்றும் ஊரடங்கு உத்தரவு மேலும் சிறிது நாட்கள் நீட்டிப்பது பற்றி அறிவிப்பு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2517511

Next Story
கதிர் தொகுப்பு
Trending News